பாலின துன்புறுத்தலுக்கு எதிராக திருச்சியில் கல்லூரி மாணவர்கள் மாரத்தான்
பாலின துன்புறுத்தலுக்கு எதிராக திருச்சி ஜமால் முகமது கல்லூரி மாணவர்கள் மாரத்தான் ஓட்டம் நடத்தினர்.;
திருச்சி ஜமால் முகமது கல்லூரி மாணவர்கள் மாரத்தான் ஓட்ட போட்டி நடத்தினர்.
திருச்சி ஜமால் முகமது கல்லூரி பாலின சமத்துவ சங்கம் மற்றும் போதை ஒழிப்போர் கழகத்தினர் இணைந்து நடத்திய மாபெரும் மாரத்தான் போட்டி இன்று காலை கல்லூரி அருகில் இருந்து புறப்பட்டது.
கல்லூரி வளாகத்தில் இருந்து தொடங்கிய மாரத்தான் அண்ணா ஸ்டேடியம், E.V.R கல்லூரி, SRM ஹோட்டல் வழியாக மீண்டும் கல்லூரியை வந்தடைந்தது. இம் மாரத்தான் போட்டியைக் கல்லூரியின் செயலர் மற்றும் தாளாளர் டாக்டர் அ.கா. காஜா நஜீமுத்தீன் மற்றும் துணை செயலர் டாக்டர் க.அப்துல் சமது ஆகியோர் தொடங்கி வைத்தனர். கல்லூரி முதல்வர் இஸ்மாயில் முகைதீன் தலைமையில் நடைபெற்ற இம்மாரத்தான் போட்டியில் கலந்துகொண்ட பகுதி ஐந்தின் ஒருங்கிணைப்பாளர் பேரா. எஸ்.ஷேக் இஸ்மாயில் பங்கேற்பாளர்களை வாழ்த்தினார். மராத்தானில் 300 க்கும் அதிகமான மாணவர்கள் பங்கேற்றனர்.
இம்மாரத்தான் போட்டி பாலின துன்புறுத்தலுக்கு எதிராகவும், போதை மற்றும் புகையிலைப் பொருட்களுக்கு எதிராக சமூக விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்தி எதிர்கால தேச நலனைக் காக்கும் உன்னத நோக்கத்தை அடிப்படையாக கொண்டு நடத்தப்பட்டது.
இந்த நிகழ்வினைப் பாலின சமத்துவ சங்கத்தின் ஆலோசகர் அப்துல் ரஷீத் மற்றும் போதை ஒழிப்போர் கழகத்தின் ஆலோசகர் பேராசிரியர் முஹம்மது இஸ்மாயில் ஹஸனி ஆகியோர் ஒருங்கிணைத்தனர்.