வழக்கறிஞர் சேம நல நிதியை ரூ.10 லட்சமாக உயர்த்திய முதல்வருக்கு நன்றி
வழக்கறிஞர் சேம நல நிதியை ரூ.10 லட்சமாக உயர்த்திய முதல்வருக்கு திருச்சி வழக்கறிஞர் நன்றி தெரிவித்துள்ளார்.;
வக்கீல் பன்னீர்செல்வம்.
தமிழ்நாடு பனைத் தொழிலாளர்கள் நலச் சங்க தலைவரும், தமிழ்நாடு பா.ஜ.க. வழக்கறிஞர் பிரிவு முன்னாள் மாநிலச் செயலாளருமான வக்கீல் திருச்சி பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழகத்தில் அரசியல் மாற்றத்தையும், ஆட்சி மாற்றத்தையும் ஏற்படுத்திய பெருமை தமிழக வழக்கறிஞர்களுக்கு உண்டு. அத்தகைய வழக்கறிஞர்கள் தமிழக மக்களுக்கு நீதி கிடைக்கவும் ,சமநிலை கிடைத்திடவும் தங்களை அர்ப்பணித்து செயலாற்றி வருகிறார்கள்.அத்தகைய வழக்கறிஞர்கள் மீதும்,அவர்கள் குடும்பத்தினர் மீதும் அக்கறை கொண்டுதாயுள்ளத்தோடு சேமநல நிதி திட்டத்தைகொண்டு வந்தவர் முன்னாள் முதல்வர் கருணாநிதி ஆவார்.
இன்று கருணாநிதி வழியில் செயல்பட்டு வரும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வழக்கறிஞர்களின் கோரிக்கையை ஏற்று ரூ. 7 லட்சமாக இருந்த சேமநலநிதியினை ரூ 10 லட்சமாக உயர்த்தி வழங்கிட ஆணையிட்டுள்ளார். அதற்கு தமிழக வழக்கறிஞர்கள் சார்பில் நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன்.நீதிமன்றங்களில் வழக்காடு மொழியாக தமிழ் இருக்க வேண்டும் என்கிற அவரது கோரிக்கை விரைவில் நிறைவேறும் என்பது தமிழக மக்கள் மற்றும் வழக்கறிஞர்களின் எதிர்பார்ப்பாகும்.
இந்நிலையில் உச்ச நீதிமன்ற நீதிபதி நீதியரசர் ரமணாவின் பேச்சு தமிழக மக்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரமணா, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆகியோருக்கு தமிழக மக்களின் சார்பிலும், தமிழக வழக்கறிஞர்கள் சார்பிலும் நெஞ்சார்ந்த நன்றியையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு வழக்கறிஞர் பன்னீர்செல்வம் கூறியுள்ளார்