திருச்சி கருமண்டபத்தில் அ.தி.மு.க. சார்பில் தெருமுனை பிரச்சார கூட்டம்

திருச்சி கருமண்டபத்தில் அ.தி.மு.க. சார்பில் தெருமுனை பிரச்சார கூட்டம் நடைபெற்றது.

Update: 2024-02-18 15:50 GMT
திருச்சியில் அதிமுக சார்பில் தெருமுனை பிரச்சார கூட்டம் நடைபெற்றது.

தி.மு.க. துணை பொதுச்செயலாளர் ஆ ராசா எம்பி கடந்த சில நாட்களுக்கு முன் அதிமுக நிறுவன தலைவரும், மறைந்த முதல்வருமான எம்ஜிஆரை கடுமையாக தாக்கி பேசினார்.அவர் அப்படி அவதூறாக பேசியதற்கு திமுக தலைவர் ஸ்டாலின் உள்பட யாரும் வருத்தம் கூட தெரிவிக்கவில்லை. ராசா பேசியதை கண்டிக்கவும் இல்லை. மறைந்த தலைவரை அவமானப்படுத்திய ராசா மீது நடவடிக்கை எடுக்காத திமுக தலைமையை கண்டித்து எல்லா மாவட்டங்களிலும் ஆர்ப்பாட்டம் நடத்தும்படி அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பினை வெளியிட்டார்.

அதன்படி இன்று தமிழகம் முழுவதும் அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக ஜங்ஷன் பகுதி சார்பில் கருமண்டபத்தில் தெருமுனை பிரச்சார கூட்டம் நடைபெற்றது.

திருச்சி மாநகர், மாவட்ட அதிமுக ஜங்ஷன் பகுதி கழகம் சார்பில் கருமண்டபத்தில் தெருமுனை பிரச்சார கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஜங்ஷன் பகுதி செயலாளர் நாகநாதர் பாண்டி தலைமை தாங்கினார். அமைப்பு சாரா ஓட்டுனர் அணி மாவட்ட செயலாளரும்,முன்னாள் கோட்ட தலைவருமான ஞானசேகரன் வரவேற்றுப் பேசினார். கூட்டத்தில் ஜெயலலிதா பேரவை மாநில துணை செயலாளர்கள் ஜோதிவாணன், மாமன்ற உறுப்பினர் அரவிந்தன், மாவட்ட துணைச் செயலாளர்கள் வனிதா, பத்மநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் திருச்சி மாநகர், மாவட்டஅதிமுக செயலாளர் ஜெ.சீனிவாசன் அதிமுக அமைப்பு செயலாளரும், முன்னாள் அரசு கொறடாவுமான ஆர்.மனோகரன் ஆகியோர் சிறப்புரையாற்றினர் .

கூட்டத்தில் அதிமுக மாவட்ட வர்த்தக பிரிவு செயலாளர் ஜோசப் ஜெரால்டு, மாவட்ட வர்த்தக பிரிவு இணைச் செயலாளர் டிபன் கடை கார்த்திகேயன், இலக்கிய அணி பாலாஜி, கலைப்பிரிவு ஜான்எட்வர்ட்,சிறுபான்மை பிரிவு மீரான், மகளிரணி நசீமாபாரிக் பகுதிச் செயலாளர்கள் அன்பழகன், ராஜேந்திரன், மற்றும் தென்னூர் அப்பாஸ்,எனர்ஜி அப்துல் ரகுமான், பழனியப்பன், எம்.கே.குமார், சாத்தனூர் வாசு, வக்கீல்கள் முல்லை சுரேஷ்,சசிகுமார்,தினேஷ் பாபு, முத்துமாரி,ஜெயராமன் மற்றும் கே டி அன்பு ரோஸ்,கே. டி அ. ஆனந்தராஜ், முத்துக்குமார், கிருஷ்ணமூர்த்தி, கணேசன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.முடிவில் மாவட்ட துணை செயலாளர் வனிதா அனைவருக்கும் நன்றி கூறினார்.

Tags:    

Similar News