எடப்பாடி பழனிசாமிக்கு அ.தி.மு.க. அமைப்பு செயலாளர் ரத்தினவேல் வாழ்த்து
எடப்பாடி பழனிசாமிக்கு அ.தி.மு.க. அமைப்பு செயலாளர் ரத்தினவேல் வாழ்த்து தெரிவித்தார்.;
அ.தி.மு.க பொதுக்குழு தொடர்பான மேல் முறையீட்டு வழக்கில் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக கோர்ட்டு தீர்ப்பு அளித்தது. இதனை தொடர்ந்து கோர்ட்டு தீப்பின்படி எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளராக நீடித்து வருகிறார். இதனை தொடர்ந்து அ.தி.மு.க. அமைப்பு செயலாளரும் முன்னாள் எம்.பி.யுமான டி ரத்தினவேல் எடப்பாடி பழனிசாமிக்கு பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார்.