அண்ணாசிலைக்கு டி.ரத்தினவேல் தலைமையில் அ.தி.மு.க.வினர் மாலை அணிவிப்பு

திருச்சியில் அண்ணாசிலைக்கு டி.ரத்தினவேல் தலைமையில் அ.தி.மு.க.வினர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

Update: 2022-09-15 07:51 GMT

திருச்சியில் அண்ணாசிலைக்கு முன்னாள் எம்.பி. டி. ரத்தினவேல் தலைமையில் அ.தி.மு.க.வினர் அண்ணாசிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

மறைந்த தமிழக முதலமைச்சர் அண்ணாவின் 114 -வது பிறந்தநாள் விழா இன்று தமிழக முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அ.தி.மு.க.மற்றும் தி.மு.க.வினர் ஆங்காங்கே அண்ணா சிலைக்கு மாலை அணிவித்தும், உருவப்படத்திற்கு மலர் தூவியும் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.


இந்நிலையில் திருச்சி சிந்தாமணி அண்ணா சிலையில் உள்ள அண்ணா சிலைக்கு அ.தி.மு.க. சார்பில் மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அ.தி.மு.க. அமைப்பு செயலாளரும், முன்னாள் ராஜ்யசபா எம்.பி.யுமான டி.ரத்தினவேல் தலைமையில் அ.தி.மு.க.வினர் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர். இந்நிகழ்ச்சியில் முன்னாள் மாவட்ட செயலாளர் பரமசிவம் ,ஆவின் பால்வளத் தலைவர் கார்த்திகேயன், இளைஞர் அணி பத்மநாபன்,, முன்னாள் கவுன்சிலர் சகாதேவ் பாண்டியன் உட்பட ஏராளமான அ.தி.மு.க.வினர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவருக்கும் முன்னாள் எம்.பி. ரத்தினவேல் இனிப்புகளை வழங்கினார்.

Tags:    

Similar News