திருச்சி புறநகர் தெற்கு மாவட்டத்தில் அ.தி.மு.க. 52ம் ஆண்டு விழா கொண்டாட்டம்
திருச்சி புறநகர் தெற்கு மாவட்டத்தில் அ.தி.மு.க. 52ம் ஆண்டு விழா கொண்டாட்டம் மிக சிறப்பாக நடைபெற்றது.
திருவெறும்பூர் அருகே அ.தி.மு.க. 52 வது ஆண்டு விழா கொண்டாட்டம் திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட செயலாளர் ப. குமார் தலைமையில் நடந்தது.
எம்.ஜி.ஆரால் 1972ம் ஆண்டு தொடங்கப்பட்டது அகில இந்திய அண்ணா தி.மு.க. என்ற பேரியக்கம். இந்த இயக்கம் தொடங்கப்பட்டு 52 ஆண்டுகள் நிறைவு பெற்றிருப்பதை முன்னிட்டு அக்டோபர் 17ம்தேதி ஐப்பத்திரண்டாம் ஆண்டு விழாவை சிறப்பாக கொண்டாட அ.தி.மு.க .பொதுச்செயலாளரும், தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் தமிழக முதல்வருமான எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார். அவரது உத்தரவின் அடிப்படையில் தமிழகம் முழுவதும் இன்று அதிமுக 52ம் ஆண்டு விழா மிக சிறப்பாக கொண்டாடப்பட்டது.
அந்த வகையில் அ.தி.மு.க. கட்சியின் 52 ஆவது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு திருச்சி தெற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட திருவெறும்பூர் பெல் கணேசா பகுதியில் உள்ள எம்ஜிஆர் சிலைக்கும், ஜெயலலிதா திரு உருவப் படத்திற்கும் திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட அதிமுக செயலாளர் ப.குமார் மாலை அணிவித்து மரியதை செய்தார்.பின்னர் எம். ஜி. ஆர். சிலையின் கீழே உள்ள ஜெயலலிதாவின் உருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செய்தார்.
பின்னர் பெல் கணேசா பகுதியில் கட்சி கொடியை கட்சியின் மூத்த உறுப்பினர் ஏற்றி வைக்க கல்வெட்டை ப.குமார் திறந்து வைத்தார். இதில் கலந்து கொண்ட அனைவருக்கும் இனிப்பு சிற்றுண்டி வழங்கப்பட்டது.
இந்த விழாவில் ஏ.டி.பி. தொழிற்சங்க பொதுச் செயலாளர் கார்த்திக், திருவெறும்பூர் தெற்கு ஒன்றிய செயலாளர் ராவணன், வடக்கு ஒன்றிய செயலாளர் எஸ் கே டி கார்த்திக், கூத்தைப்பார் பேரூர் கழக செயலாளர் முத்துக்குமார் துவாக்குடி நகர செயலாளர் பாண்டியன், அவைத்தலைவர் சுரேஷ்,நகர தொழில்நுட்ப அணி செயலாளர் செந்தில் குமார் , மாவட்ட துணை செயலாளர் சுபத்ரா தேவிசுப்பிரமணி, அதிமுக நிர்வாகிகள் ராஜராஜன்,நவல்பட்டு பால மூர்த்தி,ரோஷன் முருகானந்தம் உட்பட கட்சி நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.