திருச்சி ஒருங்கிணைந்த பஸ் நிலையம் பணியை கூடுதல் தலைமை செயலாளர் ஆய்வு

திருச்சி ஒருங்கிணைந்த பஸ் நிலையம் பணியை கூடுதல் தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா ஆய்வு செய்தார்.

Update: 2022-07-18 05:36 GMT

திருச்சி பஞ்சப்பூர் ஒருங்கிணைந்த பஸ் நிலைய பணியை தமிழக அரசின்  கூடுதல் தலைமை செயலாளர்  சிவ்தாஸ் மீனா ஆய்வு செய்தார்.

திருச்சி பஞ்சப்பூரில் ரூ. 350 கோடி மதிப்பீட்டில் ஒருங்கிணைந்த பஸ் நிலையம் அமைப்பதற்கான பணிகள் தொடங்கியுள்ளது. முதற்கட்டமாக ரூ. 20.10 கோடி மதிப்பீட்டில் கிராவல் மண் நிரப்பும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த பணியை தமிழக அரசின் நகராட்சி மற்றும் குடிநீர் வழங்கல் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது நகராட்சிகளின் நிர்வாக இயக்குனர் பொன்னையா, திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார், மாநகராட்சி ஆணையர் வைத்தியநாதன் உட்பட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News