23 மீனவர்களை மீட்க நடவடிக்கை: மத்திய அசைமச்ர் எல். முருகன் பேட்டி

23 மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் திருச்சியில் கூறினார்.

Update: 2021-11-02 18:15 GMT

மத்திய அமைச்சர் எல். முருகன்

தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை இணை அமைச்சர் எல்.முருகன் திருச்சியில் நிருபர்களுக்கு பேட்டி  அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

பாரத பிரதமர்  நரேந்திர மோடி அவர்கள் போன பட்ஜெட்டில் தமிழகத்தில் மீன்வளத்துறை காக மிகப்பெரிய திட்டத்தை கொண்டு வந்தார்.மீனவ சமுதாயத்தை சேர்ந்த சகோதரிகள் அவர்களுடைய வேலைவாய்ப்பு மற்றும் பார்க் அமைப்பதற்கான திட்டம் நடந்து கொண்டிருக்கிறது.

இந்தியாவில் ஐந்து இடத்தில் கடலிலிருந்து இருந்து கொண்டுவரப்பட்ட மீனவர்களின் மீன்கள் துறைமுகத்தில் இருந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மீனவனின் ஏற்றுமதி இதனால் அதிகப்படுத்த முடியும் பொருளாதாரம்  மேம்படும்.

கொச்சின், விசாகப்பட்டினம், சென்னை உள்ளிட்ட ஐந்து இடங்களில் நவீன மீன்பிடி துறைமுகம் அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது.

கடல் பாசி உற்பத்தி அதிகளவு ஏற்றுமதி செய்வதற்கான பணிகளை மேற்கொண்டுள்ளோம். கடல்பாசி, மருந்தாகவும் உணவாகவும் பயன்படுத்தப்படுகிறது. அதற்கான உற்பத்தி செய்யப்படுகிறது.

2014-ஆம் ஆண்டுக்கு முன்பாக மீனவர்களுக்கு எந்த அளவுக்கு தாக்குதல் இருந்தது. 600 பேருக்கு மேல் இந்திய மீனவர்கள் கொல்லப்பட்டார்கள். பாரத பிரதமர் நரேந்திர மோடி ஆட்சிக்கு வந்த பின் ஒரு மீனவர்கள் கூட சுட்டுக்கொல்லப்பட வில்லை.

இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட 23 மீனவர்களை மீட்பதற்கான நடவடிக்கைகளை தற்போது மேற்கொண்டுள்ளோம். கடந்த 6 மாதங்களில் 10 ஆயிரம் கோடி ரூபாய் கடன் அதிகரித்துள்ளது. ஆனாலும் தமிழக அரசு பல்வேறு செயல்படுத்த முடியாத திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. தி.மு.க. தேர்தல் அறிக்கையில் சொல்வது ஒன்றாகவும், செய்வது ஒன்றாகவும் உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News