திருச்சியில் கணவன் மீது ஆசிட் ஊற்றி கொலை மிரட்டல் விடுத்த மனைவி கைது

திருச்சியில் கணவன் மீது ஆசிட் ஊற்றி கொலை மிரட்டல் விடுத்ததாக மனைவியை போலீசார் கைது செய்தனர்.

Update: 2021-11-07 06:30 GMT

திருச்சி கோட்டை  காவல் நிலையம் (பைல் படம்)

திருச்சி கீழதேவ தானத்தை சேர்ந்தவர் மாணிக்கம் மகன் எழிலரசன் (வயது 45). இவருக்கும் காயத்ரி என்பவருக்கும் திருமணமாகி ஒரு ஆண் குழந்தையும், ஒரு பெண் குழந்தையும் உள்ளனர். இந்நிலையில் கணவன், மனைவி இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவர்கள் இருவரும் கடந்த ஒரு வருடங்களுக்கு மேலாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் குழந்தைகள் இருவரும் அவரது அம்மாவுடன் வசித்து வருகிறார்கள்.

இதற்கிடையே கடந்த 4-ந்தேதி இரவு வீட்டில் படுத்திருந்தபோது காயத்ரி எழிலரசன் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து எழிலரசனை தகாத வார்த்தைகளால் திட்டி கையால் அடித்து அவர் கையில் வைத்திருந்த அமிலம் கலந்த திராவகத்தை (ஆசிட்) எழிலரசன் தொடையிலும் பிறப்பு உறுப்பிலும் ஊற்றி கொலை மிரட்டல் விடுத்து விட்டு சென்றதாக எழிலரசன் கோட்டை போலீசில் புகார் கொடுத்தார். இந்த புகாரின் பேரில் கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் தயாளன், சப்-இன்ஸ்பெக்டர் சண்முகம் ஆகியோர் வழக்கு பதிவு செய்து காயத்ரியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News