மகளிருக்கு எதிரான வன்கொடுமைகளை கண்டித்து ஏ.பி.வி.பி. ஆர்ப்பாட்டம்

மகளிருக்கு எதிரான வன்கொடுமைகளை கண்டித்து ஏ.பி.வி..பி திருச்சி மாவட்ட கிளை சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.;

Update: 2022-03-08 14:00 GMT

திருச்சியில் ஏ.பி.வி.பி. அமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

மகளிருக்கு எதிரான வன்கொடுமைகள் மற்றும் பாலியல் துன்புறுத்தல்களை கண்டித்தும் மகளிரின் பாதுகாப்பை உறுதி செய்ய தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டியும், மதுரை மாவட்டம் மேலூர் பகுதியில் தும்பைபட்டி கிராமத்தில் 17 வயது மாணவிக்கு நடந்த கொடூர மரணத்திற்கு நீதி கேட்டும் ஏ.பி.வி.பி. திருச்சி மாவட்ட கிளை சார்பாக இன்று [08-03-2022] சத்திரம் பேருந்து நிலையம் சிந்தாமணி அண்ணாசிலை அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் மாநகர இணை செயலாளர் சந்தோஷ் குமார் கண்டன உரையாற்றினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏ.பி.வி.பி. மாநகர செயலாளர் ஹேம சூர்யா, தென் தமிழக மாநில சமூக வலைதள பொறுப்பாளர் பிரவீன், ஏ.பி.வி.பி. பாரதிதாசன் பல்கலைக்கழக செயலாளர் விக்னேஷ்வரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு கண்டன கோஷங்களை எழுப்பினர்.

Tags:    

Similar News