திருச்சி மாநகராட்சி உயர்நிலைப்பள்ளியில் அப்துல் கலாம் பிறந்த நாள் விழா
திருச்சி மாநகராட்சி உயர்நிலைப்பள்ளியில் அப்துல் கலாம் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
மக்கள் சக்தி இயக்கம் சார்பில் டாக்டர் ஏ.பி.ஜெ அப்துல் காலமின் பிறந்த தினம் திருச்சியில் உலக மாணவர்கள் தினமாக கொண்டாட்டப்பட்டது.
மாணவர்கள் மீது அதிக அக்கறை கொண்டு அவர்கள் மீது தனி அன்பு செலுத்தியவர் முன்னாள் குடியரசு தலைவர் ஏபிஜெ அப்துல் கலாம். அக்டோபர் 15ந்தேதி அவரது பிறந்த நாள் உலக மாணவர்கள் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
அந்த வகையில் திருச்சி செந்தண்ணீர்புரம் மாநகராட்சி உயர்நிலைப்பள்ளியில் இன்று பள்ளியின் தலைமையாசிரியர் எழிலரசி தலைமையில், மக்கள் சக்தி இயக்க மாநிலப் பொருளாளர் கே.சி. நீலமேகம், திருச்சி மாவட்ட செயலாளர் ஆர்.இளங்கோ முன்னிலையில் உலக மாணவர் தினவிழா நடந்தது.
இதில் ரயில்வேயில் பணிபுரியும் அலுவலக மேற்பார்வையாளர் சாமுண்டீஸ்வரி ரங்கராஜன் கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு 200 நோட்புக், 200 பேனா வழங்கி, கனவு காணுங்கள் - கனவுகளிலிருந்து சிந்தனைகள் பிறக்கும்- சிந்தனைகள் செயல்களாகும் - என இளைஞர்களுக்கு என்றும் வழிகாட்டியாகத் திகழ்ந்தவர், அப்துல் காலம்.
"நமது பிறப்பு, ஒரு சம்பவமாக இருக்கலாம். ஆனால் இறப்பு, ஒரு சரித்திரமாக இருக்க வேண்டும்" என்று தான் கூறிய பொன்மொழிக்கு தானே எடுத்துக்காட்டாக இருந்து என்றும் சரித்திரத்தில் இடம் பெற்று இருக்கும் டாக்டர் ஏ.பி.ஜெ .அப்துல் கலாம் பிறந்த நாள் "உலக மாணவர்கள் தினம் " என கூறி மாணவர்களை வாழ்த்தினார்.
இதில் மக்கள் சக்தி இயக்க மாவட்ட நிர்வாகிகள் ஆர்.கே.ராஜா, என்.வெங்கடேஷ், ஆசிரியர்கள் சந்திரா தேவி, வினோதினி, அருணா, விக்டோரியா, மற்றும் பள்ளி ஆசிரியர்கள் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.