சிவன் கோயில்களில் நாளை ஆருத்ரா தரிசனம்

மார்கழி திருவாதிரையையொட்டி அனைத்து சிவன்கோயில்களிலும் நாளை (திங்கட் கிழமை) ஆருத்ரா தரிசனம் நடைபெறுகிறது

Update: 2021-12-19 05:45 GMT

ஆருத்ரா தரிசனம்

மார்கழி மாத  திருவாதிரையன்று அனைத்து சிவன்கோயில்களிலும் ஆருத்ரா தரிசனம் நடைபெறும்.  இதை முன்னிட்டு நடராஜருக்கு மஞ்சள், திருமஞ்சனம், பஞ்சாமிர்தம், இளநீர், பால், தயிர் கொண்டு சிறப்பு அபிஷேகம் நடை பெற்று பின்னர் மகா தீபாராதனை நடைபெறும்.

திருச்சி திருவானைக்காவலில் உள்ள ஜம்புகேஸ்வரர்-அகிலாண்டேஸ்வரி கோயில், உறையூர் பஞ்சவர்ணசாமி கோயில், மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோயில், லால்குடி சப்தரிஷீஸ்வரர் கோயில், திருப்பட்டூர் பிரம்மபுரீஸ்வரர் கோயில், திருப்பைஞ்சீலி, திருவெ றும்பூர் எறும்பீஸ்வரர், முசிறி சந்திரமவுலீஸ்வரர் கோயில், தொட்டியம் அனலாடீஸ்வரர் உட னுறை திரிபுரசுந்தரி கோயில். உள்ளிட்ட மாவட்டத்தில் உள்ள பல்வேறு சிவன் கோயில்களில் ஆருத்ரா தரிசனம் நடைபெறுகிறது.

திருச்சி மேலப்புலிவார்டுரோடு பகுதியில் உள்ள 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த சிவசுப்ரமணியசாமி கோயிலில் ஆருத்ரா தரிசனத்தையொட்டி நடராஜர் சிறப்பு அலங்காரத்துடன், சிவகாமி அம்பாள் மற்றும் பரிவார மூர்த்திகளுடன் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். இதையொட்டி இன்று (ஞாயிற் றுக்கிழமை) சிறப்பு அபி ஷேகம் நடக்கிறது.

Tags:    

Similar News