திருச்சியில் நடந்த விபத்தில் காரை இடித்து தள்ளிய தனியார் பேருந்து
திருச்சியில் நடந்த விபத்தில் தனியார் பேருந்து காரை இடித்து தள்ளியது.
திருச்சி புத்தூர் நால் ரோட்டில் தில்லைநகர் செல்லும் வழியாக பஸ் நிறுத்தம் அருகே அதிவேகமாக வந்த தனியார் பேருந்து முன்னாள் சென்று கொண்டிருந்த இனோவா காரை இடித்து தள்ளியதில் காரின் பின்பக்க பகுதி பலத்த சேதமடைந்தது.
திருச்சியில் வசூல் போட்டியில் தனியார் நகர பேருந்துகள் போட்டி போட்டுக்கொண்டு செல்வது உண்டு. இப்படி செல்லும் போது உயிரிழப்பை ஏற்படுத்திய விபத்துக்களும் நடந்து இருக்கிறது. இந்த நிலையில் தான் தற்போது நடந்த விபத்தும் தனியார் பேருந்தின் அதிவேக இயக்கமே விபத்திற்கு காரணம் என தெரியவந்துள்ளது.
இந்த விபத்தில் காரில் இருந்த யாராவது காயம் அடைந்தார்களா என தெரியவில்லை. இந்த விபத்து தொடர்பாக போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.தனியார் பேருந்துகளில் அதிக அளவில் ஒலி ஹாரன்களை உபயோகப்படுத்துகின்றனர் , இதனால் பொது மக்களுக்கும் பெரும் அச்சமாகவே இருந்து வருகிறது
திருச்சி நகரில் வேகமாக இயக்கப்படும் தனியார் பேருந்துகளை கட்டுப்படுத்த போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது மாநகர மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் கோரிக்கை ஆகும்.இன்று நடந்த விபத்தினால் புத்தூர் நாள் ரோடு டாஸ்மாக் அருகே சற்று நேரம் சலசலப்பு ஏற்பட்டது.