இருங்களூரில் 240 வீடுகள் கொண்ட புதிய அடுக்குமாடி குடியிருப்பு திறப்பு

A new apartment complex with 240 houses opens in Irungaluru;

Update: 2023-04-10 18:08 GMT

முதல்வர் காணொலி காட்சி மூலம் திறந்த அடுக்குமாடி குடியிருப்பை திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் மற்றும் அதிகாரிகள் பார்வையிட்டனர்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை, தலைமைச் செயலகத்தில் இருந்து காணொளி காட்சி வாயிலாக இன்று (10.04.2023) திருச்சிராப்பள்ளி மாவட்டம் இருங்களூர் திட்டப் பகுதியில் தமிழ்நாடு வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறையின் கீழ் செயல்படும் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் ரூபாய் 21.16 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 240 வீடுகள் கொண்ட புதிய அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடங்களை திறந்து வைத்தார்.

இருங்களூரில், நடைபெற்ற விழா நிகழ்வில் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார் கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி, குடியிருப்புப் பகுதிகளை பார்வையிட்டு, மரக்கன்றுகள் நட்டுவைத்து, பயனாளிகளுக்கு குடியிருப்புக்கான ஒதுக்கீடு ஆணைகளையும், கிரையப் பத்திரங்களையும் வழங்கினார;.

இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் பிரதீப்குமார் தெரிவித்ததாவது :-

தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தால் திருச்சிராப்பள்ளி மாவட்டம், இருங்களூர் கிராமத்தில் திட்டம் - 2ல் அனைத்து உட்கட்டமைப்பு வசதிகளுடன் 10 பிளாக்குகளில் 24 வீடுகள் வீதம் மொத்தம் 240 வீடுகள் கொண்ட புதிய அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடங்களை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்  சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து காணொளி காட்சி வாயிலாக இன்று (10.04.2023) திறந்து வைத்துள்ளார்.

இக்குடியிருப்பு கட்டிடங்கள் அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இந்த வீடுகள் பொருளாதாரத்தில் நலிவுற்ற நகர்ப்புற ஏழைகளின் குடும்பங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மதிப்பீடு ரூ.21.16 கோடியாகும். ஒவ்வொரு அடுக்குமாடி குடியிருப்பிலும் சுமார் 400 சதுரடி பரப்பளவில் வீடுகள் அமைக்கப்பட்டுள்ளது. இக்குடியிருப்புகளில் வசிப்பறை, சமையலறை, படுக்கையறை, குளியலறை மற்றும் கழிப்பறை உள்ளிட்ட அனைத்து வசதிகளுடன் கட்ட்பட்டுள்ளன. எல்லா குடியிப்புகளுக்கும் போதுமான காற்றோட்ட வசதி, தண்ணீர் வசதி, ஆழ்துளை கிணறுகள் மற்றும் 2 கீழ்நிலைத் தண்ணீh; தொட்டிகள் மற்றும் கழிவுநீர்; வசதி கட்டமைப்புடன் குடியிருப்புகள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், மழைநீர் வடிகால் மற்றும் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகள், கட்டிடங்களை சுற்றி பேவர் பிளாக் நடைபாதை போன்றவையும் அமைக்கப்பட்டுள்ளன எனத் தொpவித்தார்.

இந்நிகழ்வில், இலால்குடி வருவாய் கோட்டாட்சியர் வைத்தியநாதன். தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் நிர்வாக பொறியாளர் இளம்பரிதி, உதவி நிர்வாக பொறியாளர்முருகானந்தம் மற்றும் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள், இருங்களூர் ஊராட்சி மன்ற தலைவர் வின்சென்ட், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News