அ.தி.மு.க. வேட்பாளர் வனிதாவிற்கு பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்பு

திருச்சி மாநகராட்சி 11வது வார்டு அ.தி.மு.க. வேட்பாளர் வனிதாவிற்கு பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்பு அளித்தனர்.;

Update: 2022-02-08 17:00 GMT

வேட்பாளர் வனிதாவிற்கு ஒரு பெண் ஆரத்தி எடுத்தார்.

திருச்சி மாநகராட்சி உறையூர் பகுதி 11வது வார்டு அ.தி.மு.க. வேட்பாளராக ஆர். வனிதா போட்டியிடுகிறார். மாநகர் மாவட்ட அ.தி.மு.க. துணை செயலாளராக பதவி வகித்து வரும் ஆர். வனிதா ஏற்கனவே இதே வார்டில் 3 முறை கவுன்சிலராக தேர்ந்தெடுக்கப்பட்டு மக்கள் பணியாற்றி உள்ளார்.

கடந்த 2011 ம்ஆண்டு தேர்தலில் தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற கவுன்சிலர் என்ற பெருமையும் இவருக்கு உண்டு. இந்நிலையில் தற்போது மீண்டும் வேட்பாளராக களம் இறங்கி உள்ள வனிதா வீடு வீடாக வாக்கு சேகரிக்கும் பணியில் தீவிரம் காட்டி வருகிறார்.


அவர் செல்லும் இடங்களில் எல்லாம் ஆதரவு அளித்து வருகிறார்கள். கூப்பிட்ட குரலுக்கு ஓடிவரும் உனக்கு தான் எங்கள் ஆதரவு என மக்கள் உறுதி அளித்தனர். சில வீடுகளில் பெண்கள் வனிதாவிற்கு ஆரத்தி எடுத்து வரவேற்பு அளித்தனர்.

Tags:    

Similar News