அ.தி.மு.க. வேட்பாளர் கிருஷ்ணவேணிக்கு பெண்கள் அமோக வரவேற்பு
திருச்சி மாநகராட்சி 13வது வார்டு அ.தி.மு.க. வேட்பாளர் கிருஷ்ணவேணிக்கு பெண்கள் அமோக வரவேற்பு அளித்தனர்.;
திருச்சி மாநகராட்சி 13வது வார்டில் அ.தி.மு.க. வேட்பாளராக முன்னாள் அரசு வழக்கறிஞர் ஜி. கிருஷ்ணவேணி போட்டியிடுகிறார். வேட்பாளர் கிருஷ்ணவேணி இன்று தனது வார்டுக்கு உட்பட்ட மலைக்கோட்டை பகுதியில் வீடு வீடாக வாக்கு சேகரித்தார்.
அவர் சென்ற இடங்களில் எல்லாம் பெண்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். அமோக வரவேற்பு அளித்த பெண்களுக்கு நன்றி தெரிவித்த கிருஷ்ணவேணி இம்முறை தனக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற செய்தால் கூப்பிட்ட குரலுக்கு ஓடி வந்து பணியாற்றுவேன் என வாக்குறுதி அளித்தார். அப்போது தேர்தல் வாக்குறுதிகள், கடந்த அ.தி.மு.க. ஆட்சியின் சாதனைகள் அடங்கிய துண்டு பிரசுரங்களையும் வழங்கினார்.