அ.தி.மு.க. வேட்பாளர் கிருஷ்ணவேணிக்கு பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்பு

திருச்சி மாநகராட்சி 13-வது வார்டு அ.தி.மு.க. வேட்பாளர் கிருஷ்ணவேணிக்கு பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்பு அளித்தனர்.

Update: 2022-02-10 10:18 GMT

அ.தி.மு.க. வேட்பாளர் கிருஷ்ணவேணிக்கு பெண்கள் ஆரத்தி  எடுத்து வரவேற்றனர்.

திருச்சி மாநகராட்சி 13வது வார்டில் அ.தி.மு.க.வேட்பாளராக வழக்கறிஞர் ஜி. கிருஷ்ணவேணி  போட்டியிடுகிறார். முன்னாள் அரசு வழக்கறிஞரான கிருஷ்ணவேணி  வெனிஸ் நகர், காந்திநகர் மலைக்கோட்டை பகுதிகளில் வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்தார்.

அப்போது பெண்கள் தங்கள் பகுதியில் முறையான மழைநீர் வடிகால் வசதி செய்து தரவேண்டும், குடிநீர் பிரச்சினையை தீர்த்து வைக்க வேண்டும், சாக்கடை பிரச்சினையை தீர்க்கவேண்டும் என கோரிக்கை வைத்தனர். அவர்களது கோரிக்கைகளை நிறைவேற்றி தருவதாக கிருஷ்ணவேணி வாக்குறுதி அளித்தார்.


வேட்பாளர் கிருஷ்ணவேணிக்கு பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்பு அளித்தனர். வேட்பாளருடன் அவரது கணவரும் அ.தி.மு.க.  வழக்கறிஞர்பிரிவு இணை செயலாளருமான  தாமரைச்செல்வன்,  அ.தி.மு.க. வட்ட செயலாளர் ராஜ்மோகன், நிர்வாகிகள் ராஜ், ஜோதி சென்றிருந்தனர்.

Tags:    

Similar News