அ.தி.மு.க. வேட்பாளர் ஜோசப் ஜெரால்டு வீடு, வீடாக வாக்கு சேகரிப்பு
திருச்சி மாநகராட்சி 55வது வார்டு அ.தி.மு.க. வேட்பாளர் ஜோசப் ஜெரால்டு வீடு, வீடாக சென்று வாக்கு சேகரித்தார்.;
திருச்சி மாநகராட்சி 55வது வார்டு அ.தி.மு.க. வேட்பாளர் ஏ.ஜோசப் ஜெரால்டு தீவிர வாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபட்டுள்ளார்.
இன்று வேட்பாளர் ஜோசப் ஜெரால்டு தனது வார்டுக்குட்பட்ட தெருக்களில் வீடு வீடு வீடாக சென்று வாக்காளர்களிடம் தனக்கு ஆதரவு திரட்டினார். பெரியவர்களிடம் காலில்விழுந்து ஆசீர்வாதம் பெற்றார். குழந்தைகளிடம் கொஞ்சி மகிழ்ந்தார்.
குடிசை வாசி பெண்கள் அவருக்கு ஆரத்தி எடுத்து அவர் தேர்தலில் வெற்றி பெற வாழ்த்து கூறினார்கள். அவருடன் அந்த வார்டுக்கு உட்பட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள் சென்றிருந்தனர்.