திருச்சி மாவட்டத்தில் 99 போலீசார் தலை தீபாவளி கொண்டாட விடுமுறை

திருச்சி மாவட்டத்தில் 99 போலீசார் தலை தீபாவளி கொண்டாட எஸ்.பி.மூர்த்தி விடுமுறை அளித்து உள்ளார்.;

Update: 2021-11-03 06:15 GMT

தலை தீபாவளி கொண்டாடுவதற்காக திருச்சி மாவட்டத்தில் 99 போலீசாருக்கு விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது.

போலீஸ் வேலை என்றாலே பண்டிகை போன்ற முக்கிய தினங்களில் விடுமுறை கேட்க முடியாது. தீபாவளி, பொங்கல் போன்ற நாட்களில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருக்க வேண்டும்.போலீசாரை பொறுத்தவரை பொதுமக்கள் அனைவரும் பண்டிகைகளை கொண்டாடும்போது, அவர்கள் மட்டும் பாதுகாப்புபணி என்ற பெயரில் விடுமுறையின்றி வேலை பார்ப்பது வழக்கம்.

தற்போது போலீஸ் டி.ஜி.பி.யாக சைலேந்திரபாபு பொறுப்பேற்ற பின்னர் போலீசாருக்கு வாரவிடுமுறைஅளிக்கும் திட்டத்தை அமல் படுத்தியுள்ளார். மேலும் திருமணநாள்,பிறந்தநாள் போன்ற முக்கிய விசேஷங்களின் போது போலீசாருக்கு விடுமுறை வழங்கவும் உத்தரவிட்டார்.

அதன்படி தற்போது திருச்சி மாவட்டத்தில் 99 போலீசார் தலை தீபாவளி கொண்டாட விடுப்பு வழங்கப்பட்டுள்ளதாக திருச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு  மூர்த்தி கூறியுள்ளார். இதை போலீசார் சந்தோஷமாக வரவேற்றுள்ளனர்.

Tags:    

Similar News