திருச்சி மாவட்ட குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் குவிந்த 958 மனுக்கள்

திருச்சி மாவட்ட பொதுமக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் 958 மனுக்கள் குவிந்தன.

Update: 2023-11-20 17:44 GMT

திருச்சியில் நடந்த குறைதீர் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் பொதுமக்களிடம் இருந்து மனுக்களை வாங்கினார்.

திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சியரகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் பிரதீப் குமார் தலைமையில் இன்று (20.11.2023) நடைபெற்றது.

இக்கூட்டத்தில், இலவச வீட்டுமனைப் பட்டா, பட்டா மாறுதல், சாதிச் சான்றுகள், இதரச் சான்றுகள், குடும்ப அட்டை, முதியோர் உதவித் தொகை, அரசின் நலத் திட்ட உதவிகள், அடிப்படை வசதிகள், பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்ட உதவிகள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுமக்களிடமிருந்து 958 மனுக்கள் பெறப்பட்டது. இம்மனுக்கள் மீது உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் பிரதீப்குமார் உத்தரவிட்டார்.

இந்நிகழ்வில், மாவட்ட வருவாய் அலுவலர் இரா.அபிராமி, மாவட்ட ஆட்சித்தலைவரின் நேர்முக உதவியாளர் (பொது) சரண்யா, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் தவச்செல்வம், மாவட்ட வழங்கல் அலுவலர் மீனாட்சி, மாவட்ட ஆட்சித்தலைவரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்),தனித்துணை ஆட்சியர் (ச.பா.தி) சீனிவாசன், அரசுத்துறை அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News