திருச்சியில் பொங்கல் கொண்டாட்டத்தின்போது ஓட்டலில் சூதாடிய 9 பேர் கைது
திருச்சியில் பொங்கல் கொண்டாட்டம் ஓட்டலில் அறை எடுத்து சூதாடிய 9 பேரை போலீசார் கைது செய்தனர்.;
பொங்கல் பண்டிகை நேற்று முன்தினம் நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. பொங்கலை கொண்டாடுவதற்காக வெளியூரில் தங்கி வேலை பார்க்கும் பலரும் சொந்த ஊருக்கு திரும்பினர். இந்நிலையில் பொங்கலை சிறப்பாக கொண்டாடும் வகையில் திருச்சி மத்திய பஸ் நிலையம் அருகே உள்ள ஒரு தனியார் ஓட்டலில் அறை எடுத்து சிலர் பணம் வைத்து சூதாடுவதாக கன்டோன்மெண்ட் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
தகவலை இதையடுத்து கன்டோன்மெண்ட் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கிறிஸ்துராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடம் சென்று சூதாட்டம் நடந்த அறையில் அதிரடி சோதனை செய்தனர்.
அப்போது அங்கு சூதாடிய ராம்குமார் (46), மணி (56), சம்சுதீன் (39), இளங்கோ (60), அரசு (எ) வர்கீஸ் (70), சந்தானகோபாலன் (52), அருண்குமார் (34), கணேஷ்குமார் (45), அப்துல் மாலிக் (39) ஆகிய 9 பேரை போலீசார் கைது செய்து அவர்களிட மிருந்து ரூ.8,250/-ஐ பறிமுதல் செய்தனர்.