திருச்சி மாநகரில் கொலை வழக்கில் தொடர்புடைய 9 பேர் குண்டர் சட்டத்தில் கைது
மாநகரில் கொலை வழக்கில் தொடர்புடைய ஒன்பது பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.;
திருச்சி மாநகரம், காந்திமார்க்கெட் காவல்நிலைய எல்லைக்கு உட்பட்ட மேலபுலிவார்டு ரோடு, மரக்கடை சந்திப்பில் உள்ள பொது கழிப்பிடம் அருகில் கடந்த 13.09.21-ந்தேதி ரிஷாந்த் என்பவரை மர்ம நபர்கள் முன்விரோதம் காரணமாக கொலை செய்துவிட்டதாக அவரது தாய் புகார் கொடுத்துள்ளார்.
அதன்பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, இவ்வழக்கில் சம்மந்தப்பட்ட கொலையாளிகள் 1.சூர்யா (வயது 21) 2.ஹமீது (எ) கருப்பு (வயது 24), 3.ஸ்டீபன் (எ) மொட்ட ஸ்டீபன் (வயது 27), 4.வேலு (எ) மாஞ்சா வேலு (எ) ராஜதுரை (வயது 23), 5.குருமூர்த்தி (வயது 20), 6.வெங்கடேசன் (வயது 29), 7.சுரேந்தர் (வயது 33), 8.மணிகண்டன் (எ) டிராகன் மணி (வயது 19), 9.அரவிந்த் (வயது 27) ஆகியோர்களை கடந்த 14.09.21- ந்தேதி கைது செய்யப்பட்டு கோர்ட் காவலுக்கு அனுப்பப்பட்டது.
விசாரணையில் இந்த 9 கொலையாளிகள் தொடர்ந்து குற்றம் செய்யும் எண்ணம் உடையவர் என தெரிய வருவதாலும், அவரது தொடர் குற்ற நடவடிக்கையை தடுக்கும் பொருட்டும் காந்திமார்க்கெட் சட்டம் ஒழுங்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் கொடுத்த அறிக்கையிளை பரிசீலனை செய்து, திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன் மேலும் 9 கொலையாளிகள் மீதும் குண்டாசின் கீழ் கைது செய்ய உத்தரவிட்டார்.
அதனை தொடர்ந்து திருச்சி மத்திய சிறையில் இருந்து வரும் 9 நபர்களும் குண்டாசில் சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும், திருச்சி மாநகரில் இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடுவோர் மீது சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என திருச்சி மாநகர கமிஷனர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.