72 -வது பிரதேச ராணுவ தினத்தையொட்டி திருச்சியில் வீரர்கள் ரத்த தானம்

72-வது பிரதேச ராணுவ தினத்தை யொட்டி திருச்சியில் ராணுவ வீரர்கள் ரத்த தானம் செய்தனர்.;

Update: 2021-10-07 09:00 GMT
பிரதேச ராணுவதினத்தையொட்டி திருச்சியில் ராணுவ வீரர்கள் ரத்த தானம் செய்தனர்.

ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் ஏழாம் தேதி பிரதேச ராணுவ தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில்  72-வது பிரதேச ராணுவ தினத்தை முன்னிட்டு திருச்சியில் உள்ள 117 பட்டாலியன் ராணுவ மையத்தில் சிறப்பு நிகழ்ச்சிகள் இன்று  நடைபெற்றது.

இந்த நிகழ்சிகளின் ஒரு பகுதியாக  ரத்ததான முகாமும் நடைபெற்றது. இதில் ராணுவ வீரர்கள், ராணுவ அதிகாரிகள் 60-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு ரத்த தானம் செய்தனர்.

Tags:    

Similar News