திருச்சி நகரில் பிரமாணபத்திரத்தை மீறிய 7 குற்றவாளிகள் சிறையில் அடைப்பு

திருச்சி நகரில் பிரமாணபத்திரத்தை மீறிய 7 குற்றவாளிகள் சிறையில் அடைப்பு;

Update: 2022-02-11 06:31 GMT

திருச்சி மாநகர போலீஸ் கமிஷனராக ஜி.கார்த்திகேயன், பொறுப்பேற்றது முதல் திருச்சி மாநகரத்தில் குற்றச்சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்கும் பொருட்டு பல்வேறு முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.

திருச்சி மாநகரம், பல்வேறு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட, சரித்திரப்பதிவேடு ரவுடிகள் 1. விக்கி (எ) விக்னேஷ், 2. வருண், 3. சக்திவேல், 4. சங்கர் (எ) ஆட்டோசங்கர், 5. முகில்குமார், 6. மணிகண்டன் (எ) ஆட்டோபாலு, 7. பாலு (எ) டோரிபாலு ஆகியோர் பல்வேறு குற்ற வழக்குகளில் ஈடுபட்டுள்ளதால், அவர்கள் தொடர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபடுவதை தடுப்பதற்காக சம்மந்தப்பட்ட காவல்நிலைய ஆய்வாளரின் பிணையப்பட்ட அறிக்கையின்படி எதிரிகளை நிர்வாக செயல்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்ததின் பேரில், ஒரு வருட காலத்திற்கு பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கமாட்டேன், குற்றச்செயல்களில் ஈடுபடமாட்டேன் என்ற நன்னடத்தை உறுதிமொழி பிரமாண பத்திரத்தை மேற்கண்ட 7 ரவுடிகள் தாக்கல் செய்துள்ளார்கள்.

மேற்கண்ட 7 பேரும் நன்னடத்தை பிரமாண பத்திரம் தாக்கல் செய்த பின்பு, தாங்கள் தாக்கல் செய்த நன்னடத்தை பிரமாண பத்திரத்தை மீறி கத்தியை காட்டி வழிப்பறி செய்தல் மற்றும் பொது சொத்திற்கு பங்கம் விளைவித்தல் போன்ற செயல்களில் ஈடுபட்டதால் அவர்கள் மீது சம்மந்தப்பட்ட காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, ஏற்கனவே உறுதிமொழி பிரமாண பத்திரத்தில் கொடுத்த நன்நடத்தை நிபந்தனைகளை மீறியதற்காக மேற்படி எதிரிகளை நிர்வாக செயல்துறை நடுவர் நீதிமன்றம் முன்பு ஆஜர்படுத்தப்பட்டும் விசாரணை செய்தும், மேற்படி நபர்கள் தாக்கல் செய்த நன்னடத்தை பிரமாண பத்திரத்தில், குற்றசெயல்கள் புரியாமல் நன்னடத்தையில் இருந்த காலத்தை தவிர மீதியுள்ள நாட்களை மேற்கண்ட 7 பேர் சிறையில் கழிக்க நிர்வாக செயல்துறை நடுவரால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, மேற்படி ரவுடிகள் உடனடியாக திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்கள். மேலும், திருச்சி மாநகரில் இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் எச்சரித்துள்ளார்.

Tags:    

Similar News