திருச்சி மாவட்டத்தில் விவசாயிகளுக்கு வழங்க 60 ஆயிரம் மரக்கன்றுகள் தயார்
திருச்சி மாவட்டத்தில் விவசாயிகளுக்கு வழங்க 60 ஆயிரம் மரக்கன்றுகள் தயார் நிலையில் உள்ளது.
திருச்சி மாவட்டத்தில் பசுமையாக்கல் திட்டத்தின் கீழ் வனத் துறை சார்பில் விவசாயிகளுக்கு இலவசமாக மரக்கன்றுகள் வழங்கப்பட்டு வருகிறது. இதற்காக திருச்சி மாவட்டம் துறையூர் தாலுகா சோபனபுரம் என்ற இடத்தில் அமைக்கப்பட்டுள்ள நாற்றங்காலில் 60 ஆயிரம் மரக்கன்றுகள் தயார்நிலையில் உள்ளன. இந்த நாற்றங்கால்களின் செயலாக்கம் பற்றி திருச்சி மாவட்ட கலெக்டர் பிரதீப்குமார் இன்று ஆய்வு செய்தார். அப்போது மாவட்ட வன அலுவலர் கிரண் உடனிருந்தார்