மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் 54 பேர் இந்திய கம்யூனிஸ்டில் ஐக்கியம்

திருச்சியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் 54 பேர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் ஐக்கியமாகி உள்ளனர்.;

Update: 2023-01-29 15:47 GMT

திருச்சியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் 54 பேர் இந்திய கம்யூனிஸ்டு கட்சியில் இணைந்தனர்.

திருச்சியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த 54 பேர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்தனர்.

திருச்சி பெரிய மிளகு பாறையில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் மேற்கு பகுதி செயலாளர் இரா.சுரேஷ் முத்துசாமி தலைமையில் நடைபெற்ற இணைப்பு விழா நிகழ்ச்சியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருச்சி மாநகர் மாவட்ட குழு உறுப்பினர் சி.சந்திர பிரகாஷ் தலைமையில் கிளை செயலாளர்கள் மௌலானா, ராமசாமி, ரமேஷ்,பிரேமா, புவனா, மாரியம்மா உள்ளிட்ட 54 பேர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்தனர்.

கட்சியில் இணைந்தவர்கள் மத்தியில் ஏ.ஐ.டி.யு.சி. மாவட்ட பொதுச்செயலாளர் கவுன்சிலர் சுரேஷ் பேசினார்.

மேலும் இதில் மாதர் சங்கத்தைச் சேர்ந்த எல்.லலிதா, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தைச் சேர்ந்த எஸ். காஜா, தர்மா, சி.ஐ.டி.யு. ஆட்டோ சங்கத்தைச் சேர்ந்த எஸ்‌.ஆசிக் அலி ஆகியோரது தலைமையிலும் தங்களது சங்க நிர்வாகிகளோடு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வெகுஜன அமைப்பில் இணைத்துக் கொண்டனர்.

இதனை தொடர்ந்து கட்சியில் இணைந்தவர்களுக்கு ஏ.ஐ.டி.யு.சி-யின் மாவட்ட பொதுச் செயலாளர் க.சுரேஷ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநகர் மாவட்ட செயலாளர் எஸ்.சிவா ஆகியோர் சால்வை அணிவித்து வரவேற்று சிறப்புரையாற்றினார். நிகழ்விற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டத் துணைச் செயலாளர் சி.செல்வகுமார், மாதர் சங்க நிர்வாகிகள் ஆயிஷா, புஷ்பம் ஈஸ்வரி, மேற்கு பகுதி துணைச் செயலாளர் க. முருகன், பொருளாளர் பி.ரவீந்திரன், மற்றும் கிளை செயலாளர்கள் துரைராஜ், சரன்சிங் ஆகியோர் உள்பட நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர். இறுதியாகஇந்திய கம்யூனிஸ்டு கட்சியின் திருச்சி  மாவட்ட குழு உறுப்பினர் இப்ராகிம் நன்றி கூறினார்.

Tags:    

Similar News