திருச்சி ரயில் நிலையத்தில் வடமாநிலத்தை சேர்ந்த 5 சிறுவர்கள் மீட்பு

திருச்சி ரயில் நிலையத்தில் 5 சிறுவர்களை மீட்டு பெற்றோருக்கு தகவல் தெரிவித்து வரவழைத்து ஒப்படைக்க போலீசார் முயற்சித்தனர்.

Update: 2022-02-20 13:30 GMT

திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையம்.

திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்தில் ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது ஹவுராவில் இருந்து திருச்சி வந்த ரயிலில் சோதனை மேற்கொண்ட போது, சந்தேகப்படும் வகையில் இரயிலில் இருந்த 16 வயதுடைய 2 சிறுவர்கள், 15 வயது சிறுவன் ஒருவன், 14 வயது சிறுவன் ஒருவன், 17 வயது சிறுவன் ஒருவன் என மொத்தம் 5 சிறுவர்கள், ஒரு பெட்டியில் உட்கார்ந்து இருந்தனர்.

உடனே அவர்கள் 5 பேரையும் பிடித்த போலீசார் விசாரணை செய்த போது, அவர்களில் 4 பேர் மேற்குவங்க மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்பதும், ஒருவர் பீகார் மாநிலத்தை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது. மேலும் இவர்கள் திருப்பூரில் உள்ள ஒரு பனியன் கம்பெனிக்கு வேலைக்காக ரயிலில் புறப்பட்டு வந்தது தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து 5 பேரையும் மீட்ட ரயில்வே பாதுகாப்பு படையினர், ஒரு காப்பகத்தில் ஒப்படைத்ததுடன், 5 சிறுவர்களின் பெற்றோருக்கும் தகவல் தெரிவித்து வரவழைத்துள்ளனர்.

Tags:    

Similar News