திருச்சியில் நேற்று ஒரே நாளில் 495 பேருக்கு கொரோனா தொற்று

திருச்சியில் நேற்று ஒரே புதிதாக 495 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Update: 2022-01-18 03:00 GMT

பைல் படம்.

திருச்சி மாவட்டத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அந்தவகையில் திருச்சி மாவட்டத்தில் நேற்று ஒரேநாளில் புதிதாக 495 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து அவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதற்கிடையே கொரோனா பாதிப்புடன் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 308 பேர் குணமடைந்து நேற்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்பினர்.

ஆனால் கொரோனாவுக்கு நேற்று ஒருவர் பலியானார். இதன் மூலம் திருச்சி மாவட்டத்தில் இதுவரை பலியானவர்கள் எண்ணிக்கை 1,107 ஆக உள்ளது. மாவட்டத்தில் மொத்த கொரோனா பாதிப்பு 83 ஆயிரத்து 413 ஆக உயர்ந்துள்ளது.

Tags:    

Similar News