திருச்சி டீ கடைகளில் 481 கிலோ கலப்பட தேயிலை தூள் பறிமுதல்
திருச்சி டீ கடைகளில் 481 கிலோ கலப்பட தேயிலை தூளை உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.;
பறிமுதல் செய்யப்பட்ட கலப்பட தேயிலை தூளுடன் மாவட்ட நியமன அதிகாரி டாக்டர் ரமேஷ்பாபு உள்ளார்.
திருச்சி மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் ரமேஷ்பாபு தலைமையில் திருச்சி கே. கே. நகர் பகுதியில் உள்ள ஒரு பேக்கரி மற்றும் டீ கடையில் சோதனை நடத்தினர். அப்போது அந்த டீக்கடையில் 6 கிலோ கலப்பட தேயிலை பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் அந்த கடையின் உரிமையாளரது சகோதரர்கள் கருமண்டபம் மற்றும் பொன்னகரில் வைத்திருந்த டீக்கடைகளில் சோதனை செய்தபோது அங்கு 160 மற்றும் 240 கிலோ கலப்பட தேயிலை பறிமுதல் செய்யப்பட்டது. இதுதவிர கே/கே. நகர் பகுதியில் இன்னொரு டீக்கடையில் 75 கிலோ கலப்பட தேயிலை பறிமுதல் செய்யப்பட்டது. மொத்தம் 481 கிலோ கலப்பட தேயிலை தூளை பறிமுதல் செய்த அதிகாரிகள் அதனை உணவு பகுப்பாய்வுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.