திருச்சி ஹோலிகிராஸ் கல்லூரியில் 48 மணிநேர உலக சாதனை தொடர் கவியரங்கம்

திருச்சி ஹோலிகிராஸ் கல்லூரியில் "48 மணிநேர உலக சாதனை தொடர் கவியரங்கம்" இணைய வழியில் தொடங்கி நடந்தது.

Update: 2021-10-24 12:45 GMT
திருச்சி ஹோலிகிராஸ் கல்லூரி (கோப்பு படம்)

அரியலூர் தமிழ் அமுது அறக்கட்டளை மற்றும் திருச்சி புனித சிலுவை தன்னாட்சி கல்லூரி தமிழாய்வுத்துறை இணைந்து நடத்தும் "48 மணிநேர உலக சாதனை தொடர் கவியரங்கம்" நேற்று 23-ந்தேதி தொடங்கி இன்று 24-ந்தேதி வரை"உலகின் உன்னத உறவு" எனும் தலைப்பில் இணையவழியே தொடர்ந்து நடைபெற்றது.

இந்த விழாவிற்கு புனித சிலுவை தன்னாட்சி கல்லூரி முதல்வர் முனைவர் கிறிஸ்டினா பிரிஜித் தலைமை தாங்கினார். கல்லூரி செயலர் முனைவர் ஆனி சேவியர் முன்னிலை வகித்தார். கல்லூரி தமிழாய்வுத்துறைத் தலைவர் முனைவர் ஜெஸின் பிரான்சிஸ் வாழ்த்துரை வழங்கினார். இந்த நிகழ்ச்சிக்கு தஞ்சை மன்னர் சரபோஜி அரசுக் கல்லூரியின் தமிழ்த்துறை உதவிப் பேராசிரியர், முனைவர் மதுரை சந்திரன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு சிறப்புரை வழங்கினார்.

இந்த இணைய வழி நிகழ்ச்சியில் புனித சிலுவை தன்னாட்சிக் கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் மாணவியர், பிற கல்லூரி மாணவ மாணவிகள், பொதுநிலையினர் ஆகியோர் கலந்துகொண்டு கவிபாடினர். இதற்கான இணைய வழி ஏற்பாடுகளை முனைவர்கர் ஜெஸிந்தாராணி, பிரேமா, தேவதா, சுஜாதா ஆகியோர் செய்திருந்தனர். இதன் நிறைவு விழா நாளை 25-ந்தேதி காலை 9 மணியளவில் நடைபெறவுள்ளது.

Tags:    

Similar News