ஊரக உள்ளாட்சி தேர்தல் திருச்சி மாவட்டத்தில் 47 பேர் போட்டி

பத்து கிராம ஊராட்சிகளில் வார்டு உறுப்பினர் பதவிக்கு மனு தாக்கல் செய்த 10 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்

Update: 2021-09-25 14:45 GMT

திருச்சியில் நடைபெறும் உள்ளாட்சிப் பதவிகளுக்கான இடைத்தேர்தல் மனுத்தாக்கல் நடைபெற்று, மனு பரிசீலனை முடிவடைந்துள்ளது. மனு வாபஸ் பெற கடைசி நாளாக இன்று அறிவிக்கப்பட்டிருந்தது.

திருச்சி மாவட்டத்தில், மூன்று ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர்கள், இரண்டு கிராம பஞ்சாயத்து தலைவர்கள், 19 கிராம பஞ்சாயத்து கவுன்சிலர்கள் என மொத்தம் 24 பதவிகளுக்கு போட்டி போட 74 பேர் மனுத்தாக்கல் செய்திருந்தனர். இதில் இரண்டு மனுக்கள் ஏற்கெனவே தள்ளுபடி செய்யப்பட்டது. மனு வாபஸ் பெறும் நாளான இன்று 15 மனுக்கள் வாபஸ் பெறப்பட்டன.

இதன் காரணமாக தற்போது களத்தில் 47 பேர் உள்ளனர். மணிகண்டம் நாகமங்கலம் 8-வது வார்டு, மணப்பாறை கே. பெரியபட்டி 2-வது வார்டு, மணப்பாறை சீகம்பட்டி 1-வது வார்டு, மருங்காபுரி தேனூர் 8-வது வார்டு, மருங்காபுரி தேனூர் 1-வது வார்டு, மருங்காபுரி கொடும்பட்டி 4-வது வார்டு, லால்குடி கொன்னைக்குடி 5-வது வார்டு, முசிறி ஜெயங்கொண்டான் 2-வது வார்டு, தா.பேட்டை தும்பலம் 7-வது வார்டு, தொட்டியம் எம். களத்தூர் 6-வது வார்டு ஆகிய 10 கிராம பஞ்சாயத்து வார்டு கவுன்சிலர்கள் அந்தந்த இடங்களுக்கு ஒருவர் மட்டுமே மனுத் தாக்கல் செய்யப்பட்டு இருந்ததால் போட்டியின்றி மேற்கண்ட வார்டு கவுன்சிலர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

மீதம் உள்ள இடங்களுக்கு 22 பேர் போட்டியிடுகின்றனர். லால்குடி சிறு மருதூர் பஞ்சாயத்துக்கு மூன்று பேரும் புள்ளம்பாடி கீழ் அரசு பஞ்சாயத்துக்கு நான்கு பேர் என இரண்டு பஞ்சாயத்துகளிலும் மொத்தம் 7 பேர் போட்டியிடுகின்றனர். அதேபோல  ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர்கள் 3 இடங்களுக்கு 18 பேர் போட்டியிடுகின்றனர். மொத்தம் 47 பேர் போட்டியிடுகின்றனர்.

Tags:    

Similar News