திருச்சி மாவட்டத்தில் மகளிர் உரிமை தொகை பெறும் 4,42,124 பெண்கள்

திருச்சி மாவட்டத்தில் மகளிர் உரிமை தொகையை 4,42,124 பெண்கள் பெற்று பயன் அடைந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.;

Update: 2024-05-16 12:39 GMT

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் முதலமைச்சரின் காலை உணவுத்திட்டம், கல்லூரி மாணவிகள் பயன்பெறும் புதுமைப் பெண் திட்டம் மற்றும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் ஆகியவற்றின் மூலம் 5,21,507 பயனாளிகள் பயனடைந்துள்ளனர் என  மாவட்ட ஆட்சித்தலைவர் பிரதீப் குமார் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழ்நாடு அரசு மக்களுக்கான பல்வேறு திட்டங்களை தீட்டி செயல்படுத்தி வருகிறது. அவ்வகையில் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் முதலமைச்சரின் காலை உணவுத்திட்டம், கல்லூரி மாணவிகள் பயன்பெறும் புதுமைப் பெண் திட்டம் மற்றும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் ஆகியவற்றின் மூலம் 5,21,507 பயனாளிகள் பயனடைந்துள்ளனர்.

முதலமைச்சரின் காலை உணவுத்திட்டம் ஊட்டச்சத்து குறைபாட்டை எதிர்த்து குழந்தைகளின் ஊட்டச்சத்து நிலையை மேம்படுத்துவதற்காக இத்திட்டம் அனைத்து அரசு தொடக்கப்பள்ளிகளிலும் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் 16.09.2022 அன்று முதல் தொடங்கப்பட்டது. இத்திட்டம் 25.08.2023 முதல் விhpவுபடுத்தப்பட்டது. இதில் ஊரகப்பகுதிகளில் 900 பள்ளிகளில் 52101 மாணவர்களும், மாநகராட்சியில் 74 பள்ளிகளில் 8758 மாணவ மாணவியர்களும், பேரூராட்சி பகுதிகளில் 47 பள்ளிகளில் 4644 மாணவர்களும், திருச்சிராப்பள்ளி நகராட்சியின் 26 பள்ளிகளில் 2081 மாணவ மாணவியர்களும் ஆக மொத்தம் 1047 பள்ளிகளில் 67583 மாணவ மாணவியர்களுக்கு முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தில் உணவு தயார் செய்யப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது. முதலமைச்சரின் காலை உணவுத்திட்டத்தில் பயன்பெறும் 67583 மாணவ மாணவியர்களுக்கும் தட்டு மற்றும் டம்ளர்கள் வழங்கப்பட்டுள்ளது. மேலும் முதலமைச்சரின் காலை உணவுத்திட்டம் நகர்புறப்பகுதிகள் மற்றும் ஊரக பகுதிகளில் 97.5 சதவீதமும் பயனடைந்து வருகிறாh;கள்.

புதுமைப்பெண் திட்டம்

அரசுப் பள்ளிகளில் இருந்து உயர்கல்வி நிறுவனங்களுக்குச் செல்லும் பெண் குழந்தைகளின் சேர்க்கை விகிதத்தை அதிகரிக்க தமிழக அரசு மூவலூர் ராமாமிர்தம் அம்மையார்  உயர்கல்வி உறுதித் திட்டத்தை தொடங்கியுள்ளது. இத்திட்டத்தின் மூலம் யுஜி, பட்டப்படிப்பு, டிப்ளமோ, ஐடிஐ வேறு ஏதேனும் அங்கீகரிக்கப்பட்ட படிப்பை முடிக்கும் வரை பெண்களுக்கு மாதம் ரூ.1000 நிதி உதவியாக வழங்கப்படும்.

இந்தத் திட்டத்தின் கீழ் ஊக்கத் தொகை நேரடியாக மாணவிகளின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும். திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் 179 கல்லூரிகள் இருக்கின்றன. அதில் புதுமைப்பெண் திட்டத்தில் 143 கல்லூரியில் உள்ள மாணவிகள் தகுதிப் பெற்றன. மீதம் 36 கல்லூரிகளில் உள்ள மாணவிகள் தகுதி பெறவில்லை. மேலும் 143 கல்லூரிகளில் இதுவரை மொத்தம் 11800 பெண்கள் பயனடைந்துள்ளனர். தற்போது 9030 மாணவிகள் பயனடைந்து வருகின்றனர்.அதில் முதல் வருடத்தில் 1631 மாணவிகளும், இரண்டாவது வருடத்தில் 3240 மாணவிகளும், மூன்றாவது வருடத்தில் 4159 மாணவிகளும் பயன்பெற்று வருகின்றனர். மேலும் 2770 பெண்கள் பயனடைந்துள்ளனர்.

கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம்

மகளிர் பொருளாதாரத்தில் முன்னேறுவதற்கு பெரிதும் துணையாக இத்திட்டம் அமைந்துள்ளது. இதனால் உழைக்கும் மகளிர் பிறரை சார்ந்து வாழாமல் தற்சார்பு பொருளாதார முன்னேற்றம் அடைந்துள்ளனர். திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் 8,57,137 குடும்ப அட்டைகள் உள்ளன. இதில் இத்திட்டத்திற்கான பயனாளிகளாக 4,42,124 மகளிர் தேர்வு செய்யப்பட்டு மாதந்தோறும் ரூபாய் 1000அவர்களது வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டு வருகிறது. மேற்கண்ட திட்டங்களால் பயனடைந்து வரும் பயனாளிகள் தொடர்ந்து இந்த அரசுக்கு தங்களது நன்றியை தெரிவித்து வருகிறார்கள்.

இந்த தகவலை திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் தெரிவித்து உள்ளார்.

Tags:    

Similar News