திருச்சி மாவட்டத்தில் வேலை நிறுத்த போராட்டத்தில் பங்கேற்ற 4 ஆயிரம் லாரிகள்
திருச்சி மாவட்டத்தில் வேலை நிறுத்த போராட்டத்தில் 4 ஆயிரம் லாரிகள் பங்கேற்றன.
தமிழகத்தில் லாரிகளுக்கான காலாண்டு வரி உயர்வை ரத்து செய்ய வேண்டும், ஆன்லைனில் அபராதம் விதிக்கும் முறையை கைவிட வேண்டும்,இது மட்டுமன்றி மணல் தேவைக்கேற்ப அதிக அளவு குவாரிகளை திறக்க வேண்டும், தேவையற்ற சுங்க சாடிகளை உடனடியாக அகற்றவேண்டும் என்பது உள்ளிட்ட 16 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் நவம்பர் 9ம்தேதி அடையாள வேலை நிறுத்த போராட்டம் நடைபெறும் என அறிவித்து இருந்தனர்.இந்த அறிவிப்பின்படி இன்று தமிழகம் முழுவதும் லாரிகள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த போராட்டத்தால் திருச்சி குட்செட்டில் 200க்கும் மேற்பட்ட லாரிகள் முழுவதுமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அதேபோல் திருச்சி மார்க்கெட் ஈ.பி.ரோட்டில் உள்ள ஷெட்டில் நூற்றுக் கணக்கான லாரிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.திருச்சி மாவட்டத்தில் 4000க்கும் மேற்பட்ட லாரிகள் வேலை நிறுத்தத்தில் பங்கேற்றுள்ளது.அதேநேரம் இன்றைய தினம் கொண்டு செல்லப்பட உள்ள பொருட்களும் தேக்கமடைந்து உள்ளது.ஏற்கனவே நோட்டீஸ் விடுத்ததன் காரணமாக இன்றையதினம் வரவேண்டிய அரிசி மற்றும் உரங்கள் நாளை இறக்குமதி செய்யப்பட உள்ளது.
தீபாவளி நேரத்தில் நடைபெற்ற இந்த வேலை நிறுத்த போராட்டம் தொடர்பாக வியாபாரிகளுக்கு கடுமையான பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.மத்திய அரசு மற்றும் மாநில அரசுகள் லாரி தொழிலை நசுக்கும் வகையில் தொடர்ந்து இதுபோன்று செயல்பட்டு வந்தால் டிசம்பர் 1-ந் தேதிமுதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவோம் எனவும் லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.