திருச்சி கலெக்டர் தலைமையில் நடந்த குறைதீர்க்கும் கூட்டத்தில் 332 மனுக்கள்

திருச்சி மாவட்ட கலெக்டர் தலைமையில் நடந்த குறைதீர்க்கும் கூட்டத்தில் 332 மனுக்கள் பெறப்பட்டது.;

Update: 2022-03-28 16:30 GMT

குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து மனுக்களை வாங்கினார் திருச்சி மாவட்ட கலெக்டர் சிவராசு.

திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று பொதுமக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. மாவட்ட கலெக்டர் சிவராசு தலைமையில்  அதிகாரிகள் பொதுமக்களிடம் இருந்து மனுக்களை வாங்கினார்கள்.

இந்த கூட்டத்தில் மாவட்டத்தின்  பல்வேறு பகுதிகளில் இருந்தும் வந்திருந்த மக்கள் இலவச வீட்டுமனை பட்டா, பட்டா பெயர் மாறுதல், சாதி சான்றிதழ்,  மற்றும் முதியோர் உதவி தொகை உள்ளிட்ட பிரச்சினைகள் தொடர்பாக 332 மனுக்கள் கொடுத்தனர். இந்த மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.

Tags:    

Similar News