திருச்சி நகரில் குற்றச்சம்பவங்களில் தொடர்புடைய ரவுடிகள் 33 பேர் கைது
வாக்கு எண்ணிக்கையின்போது சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படாமல் இருக்க ரவுடிகள் 33 பேர் ஒரே நாளில் கைது செய்யப்பட்டுள்ளனர்.;
திருச்சி மாநகரத்தில்சட்டம், ஒழுங்கை பாதுகாக்கவும், குற்றச்சம்பவங்கள் ஏதும் நடைபெறாதவாறு முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளவும், தீவிர வாகன தணிக்கை மேற்கொள்ளவும், குற்றவாளிகள்மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்க போலீஸ் கமிஷனர் ஜி.கார்த்திகேயன் உத்தரவிட்டிருந்தார்.
19.02.2022- ந்தேதி நடந்த வாக்குப்பதிவில் பதிவான வாக்குகள் நாளை எண்ணப்படுவதால்வாக்கு எண்ணிக்கையின்போது எவ்வித அசம்பாவிதங்களும் ஏற்பட்டு விடக்கூடாது என்பதர்காகவும், அமைதியான முறையில் வாக்கு எண்ணிக்கைநடைபெறுவதற்காகவும், பல்வேறு வழக்குகளில் சம்பந்தப்பட்டமற்றும் பிரச்சனை ஏற்படுத்தக்கூடிய போக்கிரிகள் மீது நடவடிக்கை எடுக்க திருச்சி மாநகரத்தில் உள்ளதுணை ஆணையர்கள் மற்றும் ஆணையர்களுக்கும் அறிவுரைகள் வழங்கியுள்ளார்.
அதன்பேரில் திருச்சி மாநகரத்தில் கண்டோன்மென்ட் சரகத்தில் 7 ரவுடிகளும், கே.கே.நகர் சரகத்தில் 3 ரவுடிகளும். பொன்மலை சரகத்தில் 7 ரவுடிகளும், ஸ்ரீரங்கம் சரகத்தில் 6 ரவுடிகளும், காந்தி மார்க்கெட் சரகத்தில் 7 ரவுடிகளும், தில்லைநகர் சரகத்தில் 3 ரவுடிகளும் ஆக மொத்தம் இன்று ஒரே நாளில் 33 குற்ற பின்னணியில் உள்ள ரவுடிகள் கைது செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் வாக்கு எண்ணிக்கையின்போது பிரச்சினை ஏற்படுத்தக்கூடிய நபர்கள் கண்டறிந்து கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள்,
திருச்சி மாநகரில் வாக்கு எண்ணிக்கையில் பிரச்சனை ஏற்படாமல் இருக்க குற்ற பிண்ணனி உள்ள ரவுடிகள் மீது சட்டரீதியான நடவடிக்கை தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார்.