திருச்சியில் நடந்து சென்ற பெண்ணிடம் 31/2 பவுன் தாலி சங்கிலி பறிப்பு
திருச்சி சத்திரம் பஸ் நிலையம் அருகில் பெண்ணிடம் 31/2 பவுன் தாலிசங்கிலி பறித்து சென்றவரை போலீசார் தேடி வருகின்றனர்.
கரூர் மாவட்டம் தாந்தோன்றிமலை பகுதியை சேர்ந்தவர் மோகன்ராஜ் மனைவி தேனருவி (வயது 39). இவர் திருச்சி காட்டூர் பாலாஜி நகரில் உள்ள தனது தந்தையை பார்ப்பதற்காக நேற்று இரவு கரூரில் இருந்து பஸ் மூலம் திருச்சி வந்தார். பின்னர் கரூர் பைபாஸ் ரோட்டில் தாஜ் திருமண மண்டபம் அருகே பஸ்சில் இருந்து இறங்கியவர் சத்திரம் பஸ் நிலையத்திற்கு நடந்து வந்துள்ளார்.
அப்போது நியூரோ ஒன் மருத்துவமனை முன்பு வந்து கொண்டிருந்த போது பின்னால் இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு நபர்கள் திடீரென அவரது கழுத்தில் இருந்த மூன்றரை பவுன் தாலி செயினை பறித்துக் கொண்டு தப்பி சென்றதாக கோட்டை குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். இது குறித்து போலீசார், அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி காட்சிகளை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். இதில் இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்த நபர் ஹெல்மெட் அணிந்தும் பின்னால் உட்கார்ந்து இருந்தவர் மாஸ்க் அணிந்து இருந்ததாக முதல் கட்ட தகவல் கிடைத்துள்ளதாக போலீசா ர் தெரிவித்துள்ளனர்.