திருச்சியில் ஒரே நாளில் 2 சிறுமிகள் உட்பட 3 பேர் மாயம்

திருச்சியில் ஒரே நாளில் 2 சிறுமிகள் உட்பட 3 பேர் மாயமானதால் அவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.;

Update: 2022-01-09 13:30 GMT

திருச்சி ஏர்போர்ட் பகுதியில் அன்னை ஆசிரமம் உள்ளது. இந்த ஆசிரமத்தில் 17 வயது மற்றும் 15 வயதுடைய இரண்டு மாணவிகள் தங்கி இருந்துள்ளனர். இந்நிலையில் அவர்கள் இருவரும் திடீரென ஆசிரமத்திலிருந்து மாயமாகியுள்ளனர். இதுகுறித்து தமிழ்நாடு பெண்கள் நல மையம், அன்னை ஆசிரமம் சூப்பர்வைஸர் உமா என்பவர் ஏர்போர்ட் போலீசில் புகார் கொடுத்தார்.

புகாரின் பேரில் ஏர்போர்ட் போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான 2 மாணவிகளை வலைவீசி தேடி வருகின்றனர். இதேபோல திருச்சி தென்னூர் லட்சுமி அப்பார்ட்மெண்ட்டை சேர்ந்த சரவணன் என்பவரின் மகள் முத்துமாரி (வயது 21) என்பவர் தில்லைநகர் சிவசக்தி நர்சிங் ஹோமில் பணிபுரிந்து வந்துள்ளார். வழக்கம் போல் வேலைக்கு சென்ற அவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து தில்லை நகர் போலீசில் சரவணன் கொடுத்த புகாரின் பேரில், தில்லைநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான முத்துமாரியை தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News