திருச்சியில் பேராசிரியர் அன்பழகன் 2-ம் ஆண்டு நினைவு தின நிகழ்ச்சி
திருச்சியில் பேராசிரியர் அன்பழகன் 2-ம் ஆண்டு நினைவு தினம் அமைச்சர் நேரு தலைமையில் அனுசரிக்கப்பட்டது.;
திருச்சியில் பேராசிரியர் க.அன்பழகன் 2 ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு தில்லைநகர் சாஸ்திரி ரோட்டில் உள்ள தி.மு.க. முதன்மைச் செயலாளர் அலுவலகத்தில் நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் பேராசிரியரின் உருவப் படத்திற்கு தி.மு.க.வினர் மலர்தூவி அஞ்சலி செலுத்தினார்.
இந்த நிகழ்ச்சியில் மத்திய மாவட்ட பொறுப்பாளர் வைரமணி, மாநகராட்சி மேயர் அன்பழகன், எம்.எல்.ஏ.க்கள் சௌந்தரபாண்டியன், ஸ்டாலின் குமார், பழனியாண்டி, முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் அன்பில் பெரியசாமி, பரணிகுமார் மற்றும் நிர்வாகிகள் முத்துச்செல்வம், டோல்கேட் சுப்பிரமணி, கண்ணன், காஜாமலை விஜய் வழக்கறிஞர்கள் கவியரசன், அந்தோணி, நாகராஜ், கமால், கார்த்திக், மாணிக்கம், எம்.ஆர்.எஸ். குமார், எம்.பி. விஜய் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.