திருச்சி மாநகராட்சி சார்பில் சென்னைக்கு அனுப்பப்பட்ட ரூ.25 லட்சம் பொருட்கள்

திருச்சி மாநகராட்சி சார்பில் சென்னைக்கு ரூ.25 லட்சம் மதிப்புள்ள நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டது.

Update: 2023-12-06 15:09 GMT

திருச்சி மாநகராட்சி சார்பில் நிவாரண பொருட்களை மேயர் அன்பழகன் அனுப்பி வைத்தார்.

திருச்சிராப்பள்ளி மாநகராட்சி சார்பில் ரூ. 25 லட்சம் மதிப்பீட்டில் முதல் கட்டமாக சென்னை மாவட்டங்களில் மிக்ஜாம் புயல் மழையினால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நிவாரண பொருட்களை  மேயர் மு.அன்பழகன் ஆணையர் வைத்திநாதன் ஆகியோர் சென்னைக்கு வாகனத்தில் அனுப்பி வைத்தனர்.

திருச்சிராப்பள்ளி மாநகராட்சி அலுவலக வளாகத்தில் இன்று(06.12.23)சென்னை மாவட்டங்களில் மிக்ஜம் புயல் மழையினால் பாதிக்கப்பட்ட பகுதிகளை சீரமைக்கும் பணிகள் மேற்கொள்ள திருச்சிராப்பள்ளி மாநகராட்சி சார்பில் ஏற்கனவே  300 தூய்மை பணியாளர்கள், 3சுகாதார ஆய்வாளர்கள், 10தூய்மைப்பணி மேற்பார்வையாளர்கள் சுகாதாரப் பணிகளுக்கு தேவையான உபகரணங்களுடன் கடந்த 04.12.23அன்று அனுப்பி வைக்கப்பட்டனர்.

மேலும் அப்பகுதியில் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு தேவையான நிவாரண பொருட்கள் அரிசி,மளிகை பொருட்கள், போர்வைகள், ,பிஸ்கட் பாக்கெட்டுகள், பிரட், மருந்து பொருட்கள், குடிநீர் பாட்டில்கள், கோதுமை மாவு ,நாப்கின் போன்ற பொருட்கள் இன்று அனுப்பி வைக்கப்பட்டன. இவற்றின் மொத்த மதிப்பு சுமார் ரூ.25லட்சம் ஆகும். இந்த பொருட்கள் முதல் கட்டமாக அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகன் மற்றும் அதிகாரிகள் இதனை சென்னைக்கு வாகனங்களில் அனுப்பி வைத்தனர்.

Tags:    

Similar News