புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆடுதிருடிய 2 பேர் கைது: 12 ஆடுகள் மீட்பு

புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆடுதிருடியதாக 2 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 12 ஆடுகள் மீட்கப்பட்டுள்ளன.

Update: 2022-01-22 08:00 GMT

தனிப்படையினரால் மீட்கப்பட்ட ஆடுகள்.

கடந்த 23ந் தேதி திருச்சி மத்திய மண்டலத்தில் ஆடு திருடும் நபர்களை பிடிப்பதற்காக ஒரு உதவி ஆய்வாளர் தலைமையில் 3 காவலர்கள் உள்ளடக்கிய தனிப்படை திருச்சி சரக அளவில் அமைக்கப்பட்டது. மேலும் அனைத்து மாவட்டங்களிலும் ஆடு திருடும் கும்பல் மீது நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டது.

இதன்படி நேற்று புதுக்கோட்டை மாவட்டத்தில் 2 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அவர்களிடமிருந்து சுமார் ரூ.60,000 மதிப்புள்ள 12 ஆடுகள் மீட்கப்பட்டுள்ளது. ஆடுகள் திருடுவதற்காக அவர்கள் பயன்படுத்திய கார் பறிமுதல் செய்யப்பட்டது.

இதில் கடந்த 23.11.21 முதல் 21.01.22 வரை திருச்சி சரகத்திற்குட்பட்ட திருச்சி, புதுக்கோட்டை கரூர் மற்றும் பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில் ஆடு திருட்டு சம்மந்தமாக மொத்தம் 34 வழக்குகள் (திருச்சி: 14. புதுக்கோட்டை -14. கரூர்- 1. பெரம்பலூர் - 5) பதிவு செய்யப்பட்டு 14 குற்றவாளிகள் கைது செய்தனர்.

அவர்களிடமிருந்து சுமார் ரூ.7,35,000 மதிப்புள்ள 147 ஆடுகள் மீட்கப்பட்டுள்ளது. அவர்கள் ஆடு திருடுவதற்காக பயன்படுத்திய 6 வாகனங்கள் (கார்-3, டாடா ஏசி-2, இருசக்கர வாகணம் -3) பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் மீட்கப்பட்ட ஆடுகள் நீதிமன்றம் மூலம் உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டு குற்றவாளிகள் நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டுள்ளனர். ஆடு திருடுபவர்களை தொடர்ந்து கண்காணித்து நடவடிக்கை எடுக்க சரக தனிப்படையினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Tags:    

Similar News