வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க,திருத்தம் செய்ய 2 நாள் சிறப்பு முகாம்
திருச்சி மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, திருத்தம் செய்ய சிறப்பு முகாம் 2 நாட்கள் நடக்கிறது.;
இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி வருகிற ஜனவரி 1-ந் தேதியை தகுதி ஏற்பு நாளாக கொண்டு திருச்சி மாவட்டத்துக்கு உட்பட்ட 9 சட்டமன்ற தொகுதிகளிலும் 2022-ஆம் ஆண்டின் சிறப்பு சுருக்க முறை திருத்த பணிகள் நடைபெறுவதையொட்டி திருச்சி மாவட்டத்தில் நாளை (சனிக்கிழமை) மற்றும் நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) ஆகிய, 2 நாட்களிலும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்கம் செய்ய, மாறுதல்கள் செய்ய வரையறுக்கப்பட்ட சிறப்பு முகாம்கள் வாக்குச் சாவடிகளில் நடத்தப்படுகிறது.
18 வயது நிரம்பியவர்கள் தங்களது பெயர்களை படிவம் 6-ஐ பூர்த்தி செய்து சேர்த்திடவும், வாக்காளரது பெயரினை நீக்கம் செய்திட படிவம் 7-ஐயும், வாக்காளர் பட்டியலில் பெயர் திருத்தம் செய்ய வேண்டியிருப்பின் படிவம் 8-ஐயும், சட்டப் பேரவை தொகுதிக்குள் இடம் பெயர்ந்து புதிய இடத்தில் வசிப்பவர்கள் படிவம் 8ஏ-யையும் பூர்த்தி செய்து விண்ணப்பித்திட வேண்டும். இந்த தகவலை திருச்சி மாவட்ட கலெக்டர் சிவராசு தெரிவித்துள்ளார்.