திருச்சியில் கொலை வழக்கு குற்றவாளிகள் 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது
திருச்சியில் கொலை வழக்கு குற்றவாளிகள் 2 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது.;
திருச்சியில், கொலை வழக்கு குற்றவாளிகள் 2 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது.
திருச்சி மாநகரம், கோட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சத்திரம் பேருந்து நிலையம் பகுதியில் உள்ள சித்ரா ஹோட்டல் முன்பு கடந்த ஜனவரி மாதம் 14-ந்தேதி ஒருவரை சரமாரியாக தாக்கியதில் சிகிச்சை பலனின்றி பலியானார். இந்த கொலை தொடர்பாக கோட்டை போலீசில் கொடுத்த புகாரின் பேரில் கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து, அந்த நபரை கொலை செய்த வழக்கில் அண்ணன் தம்பியான மணிகண்டன் (வயது 25), அர்ஜீனன் (வயது 23) ஆகியோரை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டனர். மேலும் போலீசாரின் விசாரணையில் இந்த வழக்கின் குற்றவாளிகளான மணிகண்டன் மீது பல்வேறு காவல் நிலையங்களில் 7 வழக்குகளும், அர்ஜீனன் மீது 3 வழக்குகளும் நிலுவையில் இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து மணிகண்டன் மற்றும் அர்ஜீனன் தொடர்ந்து குற்றம் செய்யும் எண்ணம் உள்ளவர்கள் என விசாரணையில் தெரிய வருவதாலும், அவர்களது தொடர் குற்ற நடவடிக்கையை தடுக்கும் பொருட்டு கோட்டை காவல் நிலைய காவல் ஆய்வாளர் கொடுத்த அறிக்கையினை பரிசீலனை செய்து, திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் ஜி.கார்த்திகேயன், மேற்படி நபர்களை குண்டர் தடுப்பு சட்டத்தின்கீழ் கைது செய்ய ஆணையிட்டார். அதனை தொடர்ந்து திருச்சி மத்திய சிறையில் இருந்து வரும் மணிகண்டன், அர்ஜூனன் ஆகியோருக்கு குண்டர் தடுப்பு சட்டம் ஆணையினை சார்வு செய்து இருவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.
மேலும், திருச்சி மாநகரில் இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடுவோர் மீது சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார்.