திருச்சி அருகே சிறுவனை தாக்கிய 2 பேர் கைது
லதாவின் உறவுக்கார சிறுவன் புகழேந்தி, கணேசன் இருவரையும் தாக்கியவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.;
திருச்சி மாவட்டம் சோமரசம்பேட்டை போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட என். சாத்தனூரை சேர்ந்தவர் லதா. இவருக்கும், பக்கத்தில் கறிக்கடை வைத்துள்ள கணேசன் (வயது 36) மற்றும் பேக்கரி வைத்துள்ள புகழேந்தி (34) ஆகியோருக்கும் ஏற்கனவே நடைபாதை பிரச்சினை இருந்து வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் அவர்களிடையே பிரச்சினை ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த லதாவின் அண்ணன் அங்கு வந்து தனது தங்கைக்கு ஆதரவாக பேசியதாக தெரிகிறது. அப்போது லதாவின் உறவுக்கார சிறுவன் புகழேந்தியும், கணேசனும் சேர்ந்து தாக்கினர். இதுகுறித்த புகாரின் பேரில் சோமரசம் பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து இருவரையும் கைது செய்தனர்.