திருச்சி மாவட்டத்தில் மழையால் 184 ஏரி, குளங்கள் முழுமையாக நிரம்பின

திருச்சி மாவட்டத்தில் தொடர் மழையால் 184 ஏரி, குளங்கள் முழுமையாக நிரம்பி இருப்பதாக அதிகாரிகளால் தெரிவிக்கப்பட்டு உள்ளது.;

Update: 2021-11-21 08:29 GMT

திருச்சி மாவட்டத்தில் பெய்து வரும் வடகிழக்கு பருவ மழை காரணமாக ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேலும் நிலத்தடி நீர்மட்டமும் உயர்ந்து வருகிறது. தொடர் மழையின் காரணமாக நேற்று வரை மொத்தம் உள்ள 1,348 ஏரி, குளங்களில் 184 குளங்கள் முழுமையாக நிரம்பி உள்ளன. பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள அரியாறு கோட்டத்தில் மொத்தம் உள்ள 98 ஏரி மற்றும் குளங்களில் 32 முழுமையாக நிரம்பின. 25 சதவீதம்-30, 50 சதவீதம்-17, 70 சதவீதம்-7, 80 சதவீதம்-1, 90 சதவீதம்-10, 99 சதவீதம்-1-ம் நிரம்பி உள்ளன.

பொதுப்பணித்துறை ஆற்றுப்பாதுகாப்பு கட்டுப்பாட்டில் உள்ள 79 ஏரி, குளங்களில் 8 முழுமையாக நிரம்பின. அவற்றில் 70 சதவீதம்-8, 80 சதவீதம்-12, 90 சதவீதம்-8, 99 சதவீதம் வரை 40-ம் நிரம்பி உள்ளன.

திருச்சி மாநகராட்சி பகுதியில் உள்ள 13 ஏரி, குளங்களில் 3 முழுமையாக நிரம்பி உள்ளன. 90 சதவீதம்-8, 99 சதவீதம்-2-ம் நிரம்பி உள்ளன. டவுன் பஞ்சாயத்துக்கு உட்பட்ட 30 ஏரி, குளங்களில் 16 முழுமையாக நிரம்பி உள்ளன. 70 சதவீதம்-3, 80 சதவீதம்-9, 90 சதவீதம்-1, 99 சதவீதம்-1-ம் நிரம்பி உள்ளன. கிராம பஞ்சாயத்துக்கு உட்பட்ட 1,131 ஏரி, குளங்களில் 125 முழுமையாக நிரம்பி விட்டன. 25 சதவீதம்-245, 50 சதவீதம்-266, 70 சதவீதம்-157, 80 சதவீதம்-171,90 சதவீதம்-99, 99 சதவீதம்-69-ம் நிரம்பி உள்ளன.

இதுபோல மழையால் 526குடிசைகள் மற்றும் அடுக்கு மாடி குடியிருப்பு வீடுகள் பகுதியாக பாதிக்கப்பட்டுள்ளன. 244 குடிசைகள் பகுதி சேதமடைந்தன. அவற்றில் திருவெறும்பூர்-2, ஸ்ரீரங்கம்-4, முசிறி 1 ஆகும். இவற்றில் 177 சேதமடைந்த வீடுகளுக்கு உரிய நிவாரணம் வழங்கப்பட்டு விட்டது. முழுமையாக 26 குடிசைகள் சேதமடைந்துள்ளன. அவற்றில் 22 பயனாளிகளுக்கு நிவாரணம் வழங்கப்பட்டு விட்டது.

இதுபோல 280 அடுக்கு மாடி குடியிருப்பில் பகுதி சேதமடைந்தன. அவற்றில் 206 வீடுகளுக்கு நிவாரணம் வழங்கப்பட்டு விட்டது.

மேலும் மழை வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு 6 மாடுகள், 9 ஆடுகள் செத்தன. அவற்றின் உரிமையாளர்கள் 12 பேருக்கு இழப்பீடு வழங்கப் பட்டுள்ளன. மழையால் வீடு இடிந்தும், மின்சாரம் பாய்ந்தும் ஒரு பெண் மற்றும் 3 ஆண்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் 5 பேர் காயம் அடைந்துள்ளனர் என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

Tags:    

Similar News