திருச்சியில் அன்பில் தர்மலிங்கத்தின் 105 வது பிறந்த நாள் விழா
திருச்சியில் அன்பில் தர்மலிங்கத்தின் 105 வது பிறந்த நாள் விழா இன்று சிறப்பாக கொண்டாடப்பட்டது.
முன்னாள் அமைச்சர் அன்பில் தர்மலிங்கத்தின் 105 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா இன்று திருச்சியில் கொண்டாடப்பட்டது.
திமுக நிறுவன தலைவர்களில் ஒருவர் அன்பில் தர்மலிங்கம். திமுகவின் மூத்த முன்னோடியான இவர் மறைந்த அண்ணா, கருணாநிதி ஆகியோருடன் நெருக்கமான தலைவராகவும் இருந்தார். கருணாநிதி அமைச்சரவையில் வேளாண்மை துறை அமைச்சராக இருந்தார். மறைந்த முதல்வர் எம்ஜிஆருடனும் கட்சிக்கு அப்பாற்பட்ட நட்பில் இருந்தார். கருணாநிதியால் பெரியார் விருது பெற்ற பெருமையும் அன்பில் தர்மலிங்கத்திற்கு உண்டு.
திருச்சி மாவட்டத்தை பொறுத்தவரை இவரை அனைத்து கட்சி தலைவர் என போற்றப்படுவது உண்டு. அந்த அளவிற்கு அவர் எல்லோருடனும் நட்பு பாராட்டும் வகையில் இருந்தார். இவரது பேரன்தான் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆவார்.
அன்பில் தர்மலிங்கத்தின் 105 ஆம் ஆண்டு பிறந்த நாளை முன்னிட்டு, திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் அமைந்துள்ள அவரது சிலைக்கு தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சரும், திருச்சி தெற்கு மாவட்ட கழக செயலாளருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி தலைமையில் தெற்கு மாவட்ட கழக நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
நிகழ்வில் மாநகர செயலாளர் மதிவாணன் முன்னிலை வகித்தார் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் வண்ணை அரங்கநாதன், சேகரன், செங்குட்டுவன், மூக்கன், லீலாவேலு, பகுதி கழகச் செயலாளர்கள் மோகன், நீலமேகம் தர்மராஜ், ராஜ்முஹம்மது, மணிவேல், விஜயகுமார், சிவக்குமார் மாநில, மாவட்ட, மாநகர, பகுதி, ஒன்றிய, நகர, பேரூர், வட்ட, வார்டு, கிளை கழக செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், மாவட்ட பிரதிநிதிகள் மாவட்ட, ஒன்றிய, பகுதி, நகர, பேரூர், மாவட்ட - மாநகர அணிகளின் அமைப்பாளர்கள், மற்றும் உள்ளாட்சி பிரிதிநிதிகள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.