திருச்சி கோட்டை பகுதியில் 100 கிலோ குட்கா பதுக்கிய 2 பேர் கைது

திருச்சி கோட்டை பகுதியில் 100 கிலோ குட்கா பதுக்கி வைத்திருந்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.;

Update: 2021-11-02 15:45 GMT

திருச்சி கோட்டை பகுதியில் குட்கா பதுக்கி வைத்திருந்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

திருச்சி கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் தயாளன் மற்றும் போலீசார் இன்று தேவதானம் காவிரி ரோடு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அவருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் அதே பகுதியில் உள்ள ஒரு குடோனை சோதனை செய்தனர். இதில் கள்ளத்தனமாக  அதிக விலைக்கு விற்பதற்காக ஹான்ஸ் மற்றும் விமல் ஆகிய குட்கா பொருட்கள் சுமார் 100 கிலோ அளவில் பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது.

இதையடுத்து இந்த குட்கா பொருட்களை பறிமுதல் செய்த கோட்டை போலீசார், திருச்சி சிந்தாமணி பூசாரி தெருவை சேர்ந்த முருகன் (வயது 44), ஜாபர்ஷா தெருவை சேர்ந்த வச்சனராம் என்கிற வசந்த் (வயது 41) ஆகிய இருவர் மீது வழக்கு பதிவு செய்து, கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News