திருச்சியில் ஓடப்போகிறது சுற்றுச்சூழல் பாதிக்காத 100 இ பஸ்கள்
திருச்சியில் சுற்றுச்சூழல் பாதிக்காத 100 இ பஸ்கள் இயக்குவதற்கு மத்திய மாநில அரசுகள் திட்டமிட்டு உள்ளன.;
திருச்சியில் விரைவில் ஓட இருக்கும் இ பஸ்.
சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாத பொததுப் போக்குவரத்திற்கு மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.அதன் ஒரு பகுதியாக, மத்திய அரசு மின்சாரத்தால் இயங்கும் எலக்ட்ரிக் பஸ்கள (இ.பஸ்) அதிகம் பயன்படுத்த நடிவடிக்கை எடுத்து வருகிறது.
அடுத்த 10 ஆண்டுகளில் பொது போக்குவரத்தில் இ.பஸ்களின் பங்கு அதிகம் இருக்கும்.கடந்த மாதம் 16-ந் தேதி நடந்த மத்திய அமைச்சரவை கூட்டம் பிரதமரின் இ.பஸ் சேவா திட்டத்துக்கு ஒப்புதல் அளித்துள்ளது.இத்திட்டத்துக்காக ரூ.57 ஆயிரத்து 613 கோடி நிதி ஒதுக்கீடு செய்து 10 ஆயிரம் எலக்ட்ரிக் பஸ்களை நாடு முழுவதும் பல்வேறு நகரங்க ளில் இயக்க முடிவு செய்ய ப்பட்டுள்ளது.இத்திட்டத்தின் மூலம் நகர பஸ் சேவையை விரிவு படுத்துவது, சுற்றுச்சூழலை பாதிக்காத பசுமையான நகர்ப்புற சேவையை அளி ப்பது ஆகிய இலக்குகள் எட்டப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
இத்திட்டம் 3 லட்சம் அல்லது அதற்கு அதிகமான மக்கள் தொகை கொண்ட மாநகரங்களில் அமல்படுத்தப்படும் என மத்திய அரசு அறிவித்தது. அதற்கு தகுதி யான 169 நகரங்களை தேர்வு செய்து பட்டியலை வெளியிட்டுள்ளது. அதன்படி தமிழகத்தில் இத்திட்டத்திற்காக 10 லட்சம் முதல் 20 லட்சம் மக்கள் தொகை கொண்ட பிரிவில் திருச்சி மாநகரம் இடம் பெற்றுள்ளது.20 முதல் 40 லட்சம் மக்கள் தொகை பிரிவில் ேகாவையும், 5 முதல் 10 லட்சம் மக்கள் தொகை பிரிவல் ஈரோடு, சேலம், திருப்பூரும், 5 லட்சத்துக்கு குறைவாக மக்கள் தொகை பிரிவல் அம்பத்தூர், ஆவடி, தூத்துக்குடி, திருநெல்வேலி, வேலூர் நகரங்களும் இடம் பெற்றுள்ளன.
அரசு மற்றும் தனியார் பங்களிப்புடன் செயல்படுத்தப்பட உள்ள இத்திட்ட த்தின் கீழ் பஸ் பணிமனைகள், பராமரித்தல், மேம்படுத்துதல் உள்ளிட்ட வசதிகளை அரசு தரப்பு ஏற்படுத்தி தரும் இ.பஸ்கள் ஸ்டாண்டர்டு, மிடி, மினி என 3 பிரிவுகளில் இ.பஸ் கள் வழங்கப்பட உள்ளன.திருச்சி மாநகரத்துக்கு இத்திட்டத்தின் கீழ் 100 பஸ்கள் வழங்கப்படும் என தெரிகிறது.
இது குறித்து போக்குவரத்துத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கும் போது, பிரதமரின் இ.பஸ் சேவை திட்டத்தி ன் கீழ் திருச்சி தேர்வு செய்ய ப்பட்டுள்ளது.திருச்சியில், இத்திட்டம் செயல்படுத்தப்படும் போது, இபைக், சைக்கிள் பயன்பாடு மற்றும் அதற்கான வழித்த டம் ஏற்படுத்துதல் ஆகியவை உருவாக்க வாய்ப்புண்டு.இதன் மூலம் சுற்றுசுழல் மாசுபடுவது குறைந்து, பசுமை அதிகரிக்கும் என்றனர்.