ஆற்றில் குளிக்கச் சென்றவர் மாயம்? 3வது நாளாக தேடும் பணி தீவிரம்
திருச்சியில், ஆற்றில் குளிக்க சென்றவர் திரும்பி வராத நிலையில், 3வது நாளாக தேடும் பணி நடைபெற்று வருகிறது.;
மதுரை ஆரப்பாளையம் பகுதியை சேர்ந்தவர், நாகராஜ். சுமார் வயது 50 உள்ளவர். டைலர் வேலை பார்த்து வந்துள்ளார். திருச்சி பீம நகரில் உள்ள அவரது உறவினர் ஒருவர் இறந்து விட்டதால், அந்த காரியத்திற்காக நேற்று முன்தினம் திருச்சி வந்துள்ளார்.
பின்னர், இறந்தவரின் உடல் ஓயாமரியில் தகனம் செய்ய கொண்டு சென்றுள்ளனர். அப்போது, உடன் சென்ற நாகராஜன், அருகில் காவிரி ஆற்றில் குளிக்க சென்றுள்ளார், மீண்டும் கரைக்கு வரவில்லை. இது குறித்து புகாரின் பேரில் தீயணைப்பு துறையினர் நேற்று முன் தினம் மாலையும், நேற்று காலை முதல், மாலை வரையும் ஆற்றில் தேடி பார்த்தும் கிடைக்க வில்லை. இது குறித்து கோட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் இன்று 3-வது நாளாக தீயணைப்பு துறையினர், நண்பர்கள், உறவினர்கள் காவிரி ஆற்றில் தீவிரமாக தேடிவருகின்றனர்.