திருச்சி குழுமாயி அம்மன் கோயில் குட்டிக்குடி திருவிழா
திருச்சி உறையூர் குழுமாயி அம்மன் கோயில் குட்டிக்குடி திருவிழா திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்
திருச்சி புத்தூர் உய்யகொண்டான் வாய்க்கால் கரையில் ஆறுகண் பாலம் (தற்போது தொட்டிபாலம்) அருகில் அமைந்து உள்ளது குழுமாயி அம்மன் கோவில். சோழ மன்னர்களின் குல தெய்வமாக அம்மன் வணங்கப்பட்டு தற்போது திருச்சி மாநகர காவல் தெய்வமாகவிளங்கும் குழுமாயி அம்மன் கோவில் குட்டி குடித்தல் திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றதாகும்.
அம்மன் ஓலைப்பிடாரி அலங்காரத்தில் எழுந்தருளிய தேர் புத்தூர் அக்ரஹாரம், வடக்கு முத்துராஜாவீதி உள்ளிட்டமுக்கிய தெருக்கள் வழியாக வீதி உலா வந்தது.அப்பகுதியைச்சேர்ந்த பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் அம்மனுக்கு தேங்காய், பழம், மாவிளக்கு வைத்து சிறப்பு பூஜைகள்செய்தனர். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான குட்டிக் குடித்தல் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.
இதற்காக புத்தூர் மந்தையில் பக்தர்கள் நேர்த்தி கடன் செலுத்துவதற்காக ஏராளமான ஆட்டுக்கிடா குட்டிகளைக்கொண்டு வந்து வரிசையில் காத்திருந்தனர்.அதனை தொடர்ந்து இன்று காலை10.30 மணிக்கு அம்மனின் அருள் பெற்ற மருளாளி சிவகுமார் மேளதாளம் முழங்க,ஊர்வலமாக அழைத்து வரப்பட்டு பக்தர்கள் நேர்த்தி கடன் செலுத்துவதற்காக கொண்டு வரப்பட்டஆட்டுக்கிடா குட்டிகளின் ரத்தத்தை உறிஞ்சிக்குடித்தார். மேலும் வெள்ளிக் கிண்ணத்தில் கொடுக்கப்பட்டரத்தத்தையும் குடித்தார். இதில் ஏராளமான ஆட்டுக்குட்டிகள்பலியிடப்பட்டன.
முன்னதாக மாவட்ட அரசு நிர்வாகம் சார்பில் வழங்கப்பட்ட ஆட்டுக்குட்டி முதலில் பலியிடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். மேலும் இந்ததிருவிழாவையொட்டி புத்தூர் பகுதியில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணிக்காக போடப்பட்டிருந்தனர்.