திருச்சியில் தடுப்புச்சுவரில் ஸ்கூட்டர் மோதி டாக்டர் உயிரிழப்பு

திருச்சியில் தடுப்புச்சுவரில் ஸ்கூட்டர் மோதி டாக்டர், பரிதாபமாக உயிரிழந்தார்.

Update: 2021-12-11 05:15 GMT

திருச்சி மாவட்டம், துறையூர் பகுதியை சேர்ந்தவர் பாலமணிகண்டன் (வயது 27). இவர் திருச்சியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் டாக்டராக பணியாற்றி வந்தார். பாலமணிகண்டன் ஸ்கூட்டரில்,  சென்னை- மதுரை தேசிய நெடுஞ்சாலையில் தனது நண்பர் ராகுல்காந்தியுடன்,  பின்னால் அமர்ந்து சென்று கொண்டிருந்தார்.

பொன்மலை அருகே ஜி-கார்னர் வந்தபோது, சாலையின் நடுவே உள்ள தடுப்புச்சுவர் மீது ஸ்கூட்டர் மோதியது. இதில் பாலமணிகண்டனுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. உடனே அவரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்தனர். அங்கு, சிகிச்சை பலனின்றி பாலமணிகண்டன் பரிதாபமாக இறந்தார். ராகுல்காந்தி, காயம் இன்றி தப்பினார். இது குறித்து தெற்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News